முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

ஹோர்முஸ் நீரிணையில் 22 இந்திய மாலுமிகளுடன் சென்ற 2 வணிக கப்பல்கள் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

பாரசீக வளைகுடாவின் ஹோரிமுஸ் நீரிணை வழியாக 22 இந்திய மாலுமிகளுடன் சென்ற 2 வணிக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய கடும் கண்டனம் தெரிவித்தது.

கோப்புப்படம்.

Published On :

பாரசீக வளைகுடாவின் ஹோரிமுஸ் நீரிணை வழியாக 22 இந்திய மாலுமிகளுடன் சென்ற 2 வணிக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய கடும் கண்டனம் தெரிவித்தது.

ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் படைகள் மேற்கொண்டு வரும் மேற்காசிய போர் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கியது முதல், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்களும் தீவிரமடைந்து வருகின்றன. இந்தத் தாக்குதல்களில், இதுவரை 11 இந்திய மாலுமிகள் உயிரிழந்துவிட்டனர். 4,232 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய மாலுமிகளுடன் சென்ற மேலும் 2 வணிக கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஹோர்முஸ் நீரிணை வழியாக 11 இந்திய மாலுமிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்ற "எம்.டி. பெட்ரோ டால்ஃபின்' என்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 மாலுமிகள் காணாமல் போயுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அதுபோல, மார்ஷல் தீவு நாட்டுக் கொடி பொருத்திய "எம்.டி. வல்தெரா' என்ற வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பலில் பயங்கர தீ ஏற்பட்டது. இருந்தபோதும், அதிலிருந்த 11 இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.

மீட்புப் பணி மற்றும் காணாமல் போன இரு இந்திய மாலுமிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு வரும் ஓமன் நாட்டு அதிகாரிகளுடன், மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். இந்திய மாலுமிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

வணிக கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற தாக்குதல் மிகுந்த கவலை அளிக்கின்றன. இதை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது.

வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச கடல் வழித் தடங்களில் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு கப்பல்கள் சுதந்திரமாக எந்தவித தடையுமின்றி சென்று வருவதை உறுதிப்படுத்த வேண்டும். போருக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தீர்வு கண்டு, போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.