‘என்னை தூக்கிலிடுங்கள்’... தில்லி காவலர்களிடம் அபிஜீத் தீப்கே ஆவேசம்!
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, தில்லி காவலர்களிடம் ‘என்னை தூக்கிலிடுங்கள்’... என ஆவேசம்...

அபிஜீத் தீப்கேவிடம் நோட்டீஸ் கொடுக்க வந்த தில்லி காவல் அதிகாரி.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, தில்லி காவலர்களிடம் ‘என்னை தூக்கிலிடுங்கள்’... என ஆவேசமாகப் பேசிய விடியோக்கள் வைரலாகி வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி மற்றும் ஏராளாமான மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகர்களிலும் போராட்டங்கள் வலுத்திருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை போராட்டம் நடத்தக் கூடிய இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் நேற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அஜிங்கியா பிணைப் பத்திரத்தில் கையொப்பமிட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ததை எதிர்த்து கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன் வரும் வெள்ளிக்கிழமை (அக். 16) போராட்டம் நடத்தவுள்ளதாக, சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தில்லியில் அபிஜீத் தீப்கே தங்கியிருந்த பகுதிக்கு நேரில் சென்ற பெண் காவலர்கள் உள்பட 15 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், அனுமதி அளிக்கப்படாததால் போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்று நோட்டீஸ் வழங்கினர்.
அப்போது மகாத்மா காந்தியின் படம் அச்சிடப்பட்ட வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்திருந்த அபிஜீத் தீப்கே, தனது தோள்களில் மூவர்ணக் கொடியைப் போர்த்தி உட்கார்ந்திருந்தார்.
காவலர்களிடம் அபிஜீத் தீப்கே பேசும் விடியோவில், “உங்களுக்குத் தெரிந்தவற்றை எல்லாம் எழுதியிருக்கிறீர்கள். என்னை தூக்கிலிடுங்கள். நான் வன்முறையைத் தூண்டுவது போல பேசியதற்கான காணொளி ஆதாரத்தைக் காட்டுங்கள்.
தில்லி காவல்துறை இன்று இரவோ அல்லது நாளை காலையோ என்னைக் கைது செய்யலாம், ஆனால் இதனால் நாங்கள் பயப்படப் போவதில்லை என்பதை நரேந்திர மோடியிடம் நான் கூற விரும்புகிறேன்” என்று தீப்கே கூறுவது கேட்கிறது.
இருப்பினும், அபிஜீத் தீப்கே, காவலில் வைக்கப்பட்டுள்ளாரா அல்லது வீட்டுக் காவலில் உள்ளாரா என்பது குறித்து தில்லி காவல்துறையிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை.
போராட்டம் நடத்தப்படும் என்று அபிஜீத் தீப்கே கூறியதைத் தொடர்ந்து தில்லி கன்னாட் ப்ளேஸ் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. தில்லி போலீஸ், துணை ராணுவம் என 6,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Summary
Over a dozen Delhi Police personnel showed up at Abhijeet Dipke's Jhandewalan residence ahead of the CJP's 'Lehra Do Tiranga' march.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

