நாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!6-வது தங்கம் வென்ற இந்தியா! தடகளத்தில் சாதித்த சிம்ரன் ஷர்மா!டெங்கு பாதிப்புகளை தடுப்பதற்கான ஆய்வுகள் தொடக்கம்: அமைச்சர் அருண்ராஜ்பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்

தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

தீபாவளி முடியும் வரை எந்தப் போராட்டமும் நடத்தப் போவதில்லை என சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்தது குறித்து...

Abhijeet Deepke

அபிஜீத் தீப்கே - படம் - எக்ஸ்

Updated On :

தீபாவளி முடியும் வரை எந்தப் போராட்டமும் நடத்தப் போவதில்லை என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைவர் அபிஜீத் தீப்கே செவ்வாய்க்கிழமை (அக். 20) தெரிவித்தார்.

அக். 13 ஆம் தேதி ஜந்தர் மந்தருக்குள் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரைக் கைது செய்த காவல் துறை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது.

இதுகுறித்து விடியோ வெளியிட்ட அபிஜீத் தீப்கே அதில் பேசியதாவது:

தீபாவளி முடியும் வரை நாம் எந்தப் போராட்டமும் நடத்தப் போவதில்லை. சில நாள்களுக்கு உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள். உங்கள் குடும்பத்தினருடனும் உங்கள் அன்புக்குரியவர்களுடனும் இருங்கள்.

நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் இருக்கும்போது சௌரவ் மற்றும் அசுதோஷ் ஆகியோரை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால், அவர்கள் இருவராலும் தங்கள் குடும்பத்தினருடன் இருக்க முடியாது. அதனால் அவர்கள்தான் நமது குடும்பம்.

இந்தியாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். சௌரவ் தாஸும் அசுதோஷும் மகிழ்ச்சியாக சிறைக்குச் சென்றார்கள். பிரான்சில் நடப்பதை அவர்கள் செய்யவில்லை.

எங்களுடைய போராட்டங்களையும் பிரான்ஸ், நேபாளம் மற்றும் வங்க தேசத்தில் நடந்த வன்முறைக் கலவரங்களையும் ஒப்பிடாதீர்கள்.

மகாத்மா காந்தி சிறைக்கு அனுப்பப்பட்டபோது, ​​அவர் சத்தியாகிரகம் செய்ததால் அமைதியாகச் சென்றார். அதே சத்தியாகிரகத்தைத்தான் சௌரவ் தாஸும் அசுதோஷும் செய்தார்கள். எங்களை சிறைக்கு அனுப்புவதால் நாங்கள் அச்சப்பட மாட்டோம் என்று அபிஜீத் தீப்கே குறிப்பிட்டுள்ளார்.

Summary

Cockroach Janata Party (CJP) leader Abhijeet Deepke said on Tuesday (Oct. 20) that no protest will be held until Diwali is over.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER