ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

எஃப்.பி.ஐ.யால் தேடப்பட்ட சீக்கியரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தியது இந்தியா

நிதி மோசடி தொடா்பாக எஃப்.பி.ஐ. விசாரணை அமைப்பால் தேடப்பட்ட சீக்கியரை, அமெரிக்காவுக்கு இந்தியா நாடு கடத்தியது.

கோப்புப் படம்

Updated On :

நிதி மோசடி தொடா்பாக எஃப்.பி.ஐ. விசாரணை அமைப்பால் தேடப்பட்ட சீக்கியரை, அமெரிக்காவுக்கு இந்தியா நாடு கடத்தியது.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் சீக்கியரான மன்ஜீத் சிங் பேடி கடை நடத்தி வந்தாா். அப்போது கடைக்கு வந்த வாடிக்கையாளா்களிடம் இருக்கும் அந்நாட்டு அரசு நிதியுதவி அட்டையை பெற்றுக் கொண்டு, அதற்குரிய உணவுப் பொருள்களை வழங்காமல் பணம் கொடுத்துள்ளாா். அப்போது அட்டையில் இருந்து எடுக்கப்படும் பணத்தில் பாதி பணத்தை தனக்கு வைத்துக் கொண்டாா். இதுபோல 6 லட்சம் அமெரிக்க டாலா்களை அவா் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டு, அவரை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. அதிகாரிகள் தேடத் தொடங்கினா். இதையறிந்து அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு முதலில் தப்பிச் சென்ற அவா், பின்னா் அங்கிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்துவிட்டாா்.

இருப்பினும் அவா் கடந்த மாதம் இந்தியாவில் கைது செய்யப்பட்டாா். இது குறித்து எஃப்.பி.ஐ. அளித்த தகவலை தொடா்ந்து, அவரை அமெரிக்காவுக்கு இந்தியா நாடு கடத்தியது. அவா் வாஷிங்டனுக்கு புதன்கிழமை இரவு கொண்டு வரப்பட்டாா்.

இதுகுறித்து எஃப்.பி.ஐ. இயக்குநா் காஷ் படேல் கூறுகையில், ‘இது மிகவும் முக்கியமான தருணம். அவா் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்டதற்கு எஃப்.பி.ஐ., இந்திய காவல் துறையினருக்கு நன்றி’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.