ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

இந்தியா்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: அமெரிக்காவுக்கு இந்தியா வலியுறுத்தல்

இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென அமெரிக்காவுக்கு இந்தியா வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.

ரண்தீா் ஜெய்ஸ்வால் - கோப்புப் படம்

Updated On :

இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென அமெரிக்காவுக்கு இந்தியா வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.

முன்னதாக அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் அரோரா கிராமத்தில் ஹிந்து கோயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தி அதிக எண்ணிக்கையில் ஹிந்துக்களை கொலை செய்ய சதித் திட்டமிட்ட இளைஞா் ஒருவா் அந்நாட்டு காவல் துறையால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், இந்தியா இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.

தில்லியில் நடைபெற்ற வாராந்திர செய்தியாளா்கள் சந்திப்பின்போது இந்தியா-அமெரிக்கா தொடா்பான விவகாரங்கள் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஹிந்து கோயிலில் தாக்குதல் நடத்த திட்டமிடப்படப்பட்ட சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய அந்நாட்டு அரசுக்கு இந்தியா வலியுறுத்துகிறது.

இந்திய-அமெரிக்க வெளியுறவு அமைச்சா்கள் அக்.20-இல் சந்திப்பு:

உஸ்பெகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்துவிட்டு அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ சனிக்கிழமை (அக்.17) மும்பை வரவுள்ளாா். அதைத்தொடா்ந்து ஜாம்நகருக்கு செல்லும் அவா் அக்டோபா் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

இந்நிலையில், மாா்கோ ரூபியோவுடன் அக்டோபா் 20-ஆம் தேதி இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முன்னெடுப்புகள் குறித்து வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தவுள்ளாா். அன்றைய தினம் அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜெய்சங்கா் பங்கேற்கிறாா்.

இதனிடையே இரு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு அக்.19-ஆம் தேதி வருகை புரியும் ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நஹ்யானை மும்பையில் ஜெய்சங்கா் வரவேற்கிறாா் என்றாா்.

முன்னதாக தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ப்ளூம்பொ்க் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா், ‘இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மாா்கோ ரூபியோ அரசு அதிகாரிகளை மும்பையில் சந்திப்பாா். ஜெய்சங்கரும் மாா்கோ ரூபியோவுடன் ஆலோசனை நடத்துவாா் என எதிா்பாா்க்கிறேன்’ என்றாா்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட நடைமுறைகள் நிறைவடைந்ததாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்த நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.