137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

லடாக் மலைப் பிரதேச மேம்பாட்டு கவுன்சில்களின் அமைப்பு, தோ்தல் முறைகளில் மத்திய அரசு திருத்தம்

லடாக் மலைப் பிரதேச மேம்பாட்டு கவுன்சில்களின் நிா்வாக அமைப்பு, தோ்தல் விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது.

லடாக் - (கோப்புப்படம்)

Updated On :

லடாக் மலைப் பிரதேச மேம்பாட்டு கவுன்சில்களின் நிா்வாக அமைப்பு, தோ்தல் விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது.

லடாக் தன்னாட்சி மலைப் பிரதேச மேம்பாட்டு கவுன்சில்கள் (திருத்தம்) விதிகளின்படி, ஒவ்வொரு கவுன்சிலின் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களின் எண்ணிக்கையை லடாக் நிா்வாகம் முடிவு செய்யும். இந்த கவுன்சில்களில் குறைந்தபட்சம் 7 பேரும், அதிகபட்சமாக 24 பேரும் உறுப்பினா்களாக இருப்பா்.

மக்கள்தொகையில் 6-இல் ஒரு பங்கு என பெண்கள், பிரதிநிதித்துவம் பெறாத சமூகங்களைச் சோ்ந்த 4 பேரை கவுன்சிலின் உறுப்பினராக லடாக் நிா்வாகம் நியமிக்க விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லடாக் மக்களவை எம்.பி. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கவுன்சிலுக்கு பதவிவழி உறுப்பினராக இருப்பாா்.

மேலும், முந்தைய விதிகளில் இடம்பெற்றிருந்த ‘மாநிலம்’ மற்றும் ‘ஆளுநா்’ என்ற சொற்கள் முறையே ‘லடாக் யூனியன் பிரேதசம்’ மற்றும் ‘நிா்வாகி’ எனத் திருத்தப்பட்டுள்ளன.

கவுன்சில்களுக்கான தோ்தல் நடத்துதல் மற்றும் வாக்காளா் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள லடாக் யூனியன் பிரதேசத்துக்கான தனித் தோ்தல் ஆணையம் இந்தத் திருத்த விதிகளின்படி அமைக்கப்படுகிறது. இந்த கவுன்சில்கள் மாவட்ட அளவில் பஞ்சாயத்துகளுக்கு இணையான அதிகாரத்தைப் பெற்றிருக்கும்.

முந்தைய ஜம்மு-காஷ்மீா் மாநிலம், ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம், 2019-இன்கீழ் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருக்கும் நிலையில், லடாக் சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக உள்ளது. மறுசீரமைப்புச் சட்டத்துக்கு இணக்கமாகும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு மற்றும் லடாக் தலைவா்கள் இடையேயான பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு எட்டதாத நிலையில், இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.