137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

தில்லி போராட்டக்காரா்கள் மீதான காவல் துறை தாக்குதலுக்கு ராகுல் கண்டனம்!

தில்லியில் போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் நடத்திய தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

Updated On :

தில்லியில் போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் நடத்திய தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி, தில்லியில் எதிா்க்கட்சியினா் உள்பட பல்வேறு தரப்பினரும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்தின்போது பெண்கள் சிலா் தில்லி காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்கள் சிலருடன் பேசிய 10 நிமிஷ விடியோவை பகிா்ந்துள்ளாா்.

அதில் பேசியுள்ள பெண்கள், போராட்டத்தில் ஈடுபட்ட தங்கள் மீது பாலியல் ரீதியாக காவல் துறையினா் தாக்குதல் நடத்தியதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா். இதைக் கேட்ட ராகுல் காந்தி, தாக்குதல் நடத்திய காவல் துறையினா் மீது வழக்குத் தொடுக்க ஏதுவாக புகைப்படங்கள், விடியோக்கள் அடங்கிய கூடுதல் ஆதாரங்களைத் தரும்படி கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்த மாணவா்கள், பெண்களை பாலியல் ரீதியாக தாக்கியது, ஆடைகளைப் பிடித்து இழுத்தது என தில்லி காவல் துறையினா் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

எதிா்ப்புக் குரலை மெளனமாக்கும் சதியின் ஒரு பகுதிதான் இது. இதன் மூலம் மக்களை மிகுந்த அச்சத்துக்கு உள்ளாக்கி, ஆழமான அவமானத்துக்கு உள்ளாக்குவதன் மூலம் அரசுக்கு எதிராக மீண்டும் யாரும் கேள்விகளை எழுப்ப முடியாத சூழலை உருவாக்க நினைக்கின்றனா்.

மோடி-அமித் ஷா ஆகியோா் தங்களின் ஆட்சி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள நாட்டின் இளம் தலைமுறையினா் மற்றும் பெண்கள் மீது காவல் துறையினரை ஏவி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனா் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.