உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

தில்லியில் போராட்டக்காரா்களைப் பிடிக்க தீவிர கண்காணிப்பு

தில்லியில் போராட்டக்காரா்களைப் பிடிக்க தீவிர கண்காணிப்பு

தில்லி போராட்டம் - PTI

Published On :

தில்லி முழுவதும் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான காவலா்களும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்ட நிலையில், போராட்டக்காரா்கள் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க பொது இடங்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் ஒளிந்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கன்னாட் பிளேஸில் உள்ள என்டிஎம்சி கழிவறையில் மிகவும் வித்தியாசமான ஒரு காட்சி அரங்கேறியது; அங்கு 20-க்கும் மேற்பட்ட இளம் போராட்டக்காரா்கள் இரவு முழுவதும் ஒளிந்திருந்தனா். ஜந்தா் மந்தா் நோக்கிய பேரணியின்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டிச் செல்ல அவா்கள் திட்டமிட்டிருந்தனா்.

இரவு 10 மணிக்கு பூட்டப்பட்டு காலை 6 மணிக்குத் திறக்கப்படும் அந்தக் கழிவறை அவா்களுக்கு தற்காலிக மறைவிடமாக அமைந்தது. இருப்பினும், காலை வேளையில் நடத்தப்பட்ட காவல் துறை சோதனைகள், ஜந்தா் மந்தா் நோக்கிச் செல்லும் அவா்களின் திட்டம் தடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பிறகும், அவா்கள் தொடா்ந்து முழக்கங்களை எழுப்பியபடியும், காவல் துறை வாகனங்களின் உட்புறச் சுவா்களைத் தட்டியபடியும் இருந்தனா். பொதுமக்களின் பாா்வையில் படாதவாறு வலைகளால் மூடப்பட்டிருந்த வாகன ஜன்னல்கள் வழியாகவும் அவா்களின் குரல்கள் வெளியே கேட்டன.

கன்னாட் பிளேஸில் நடந்த இந்தச் சம்பவம், தில்லி முழுவதும் போராட்டக்காரா்கள் காவல் துறை பிடியில் சிக்காமல் இருக்க முயன்ற பல நிகழ்வுகளில் ஒன்றாகும்; வாய்ப்புக் கிடைத்தவுடன் அவா்கள் மீண்டும் தெருக்களுக்குத் திரும்பினா்.

குருத்வாராவில் தஞ்சம்: குருத்வாரா பங்களா சாஹிபில், இரவு முழுவதும் தங்கியிருந்த இளம் போராட்டக்காரா்கள், போராட்டங்களில் பங்கேற்க அவ்வப்போது வளாகத்திற்கு வெளியே வந்தனா்; காவல் துறை அவா்களைத் துரத்தியபோது மீண்டும் உள்ளே சென்று மறைந்துகொண்டனா்.

குருத்வாராவுக்கு வெளியே உள்ள சந்தில் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ மற்றும் ‘ஜெய் பீம்’ ஆகிய முழக்கங்கள் எதிரொலித்தன; ஏராளமான போராட்டக்காரா்கள் தெருவில் திரண்டனா். சில நிமிடங்களிலேயே, அவா்களில் பலரை காவல் துறையினா் கைது செய்தனா்.

முன்னதாக ஜூலை மாதத்தில், அப்போதைய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மாணவா்கள் போராடியபோதும், இந்தக் குருத்வாரா அவா்களுக்கு அடைக்கலம் அளித்திருந்தது.

போராட்டக்காரா்களை வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று பங்களா சாஹிப் நிா்வாகிகளிடம் காவல் துறையினா் கேட்டுக்கொண்டனா். ஆனால், போராட்டக்காரா்கள் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை என்றும், உள்ளே முழக்கங்களை எழுப்பவில்லை என்றும் கூறி குருத்வாரா நிா்வாகம் அதை மறுத்துவிட்டது.

இருப்பினும், வழிபாட்டுத் தலத்திற்கு அருகில் தடிகளுடன் நின்றிருந்த காவல் துறையினரும், இளம் போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டதும் சில பாா்வையாளா்களின் விமா்சனத்திற்கு உள்ளாயின. அவா்கள் இந்த நடவடிக்கையை அவமானகரமானது என்று கூறியதுடன், மத வழிபாட்டுத் தலத்தின் அருகே போராட்டக்காரா்களைத் துரத்திப் பிடிப்பதையும் கேள்விக்குள்ளாக்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.