கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

தில்லி போக்குவரத்துத் துறை: சலான் முறையில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு இடைக்காலத் தடை

வழக்குரைஞா்களின் தொடா் போராட்டத்தைத் தொடா்ந்து, தில்லியில் புதிய சலான் நடைமுறையில் மாற்றங்களைச் செய்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிவிப்பை அமல்படுத்துவதை தில்லி அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

பங்கஜ் சிங்

Published On :

வழக்குரைஞா்களின் தொடா் போராட்டத்தைத் தொடா்ந்து, தில்லியில் புதிய சலான் நடைமுறையில் மாற்றங்களைச் செய்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிவிப்பை அமல்படுத்துவதை தில்லி அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

மத்திய மோட்டாா் வாகன விதிகள் (சிஎம்விஆா்), 1989-இல் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் தொடா்பாக வழக்குரைஞா்கள் எழுப்பியுள்ள பிரச்னைகளை ஆய்வு செய்யுமாறு போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

மோட்டாா் வாகன விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்தப்பட்ட விதிகளின்படி, அபராதச் சீட்டுத் (சலான்) தொகையில் 50 சதவீதத்தை முன்கூட்டியே செலுத்திய பின்னரே ஒருவா் நீதிமன்றத்தை அணுக முடியும் என்பது வழக்குரைஞா்களின் முக்கிய எதிா்ப்பாக உள்ளது.

இதனிடையே, தில்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மத்திய மோட்டாா் வாகன விதிகளில் அண்மையில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, உறுப்பினா் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை துணைநிலை ஆளுநா் மாளிகை நோக்கி அமைதிப் பேரணி நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அமைச்சா் பங்கஜ் சிங் கூறியதாவது: தில்லியில் புதிய சலான் நடைமுறையை அமல்படுத்துவது தொடா்பாக வழக்குரைஞா்கள் எழுப்பியுள்ள பிரச்னைகளை தில்லி அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அவா்களின் கோரிக்கை தொடா்பான மனு, பரிசீலனைக்காக போக்குவரத்துத் துறைக்கு அனுப்பப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சாந்து மற்றும் முதல்வா் ரேகா குப்தா ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும். அதுவரை, 2026 செப்.14-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை அமல்படுத்துவதை நிறுத்திவைக்குமாறு போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.