சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் இசையமைப்பாளர் தேவாவின் உடல்! விஜயகாந்த், தேவா இருவரும் சொர்க்கத்தில் சந்திப்பார்கள்: பிரேமலதாஒருநாள் மழைக்கே சென்னை மாநகரமே தத்தளிக்கிறது: தவெக அரசை விமர்சித்த டிடிவி தினகரன்தொடர் விடுமுறை: சென்னை மாநகர் பேருந்துகளில் 3 நாள்களில் 4.15 லட்சம் பேர் பயணம்!சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி தகவல்!

மத்தியப் பிரதேசம்: லாரி மோதிய விபத்தில் பக்தர்கள் 14 பேர் பலி; பிரதமர் நிவாரணம்!

லாரி மோதிய விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவித்துள்ளது குறித்து...

Narendra modi

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப்படம்

Updated On :

லாரி மோதிய விபத்தில் பலியான 14 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளளார்.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் ஷீதலா மாதா கோயில் அருகே காத்துக் கொண்டிருந்த பல பக்தர்கள் மீது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று மோதியது. இன்று (அக். 18) அதிகாலை 1.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 14 பேர் பலியானதோடு சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரில் நடந்த விபத்து குறித்து தெரிந்தவுடன் மிகுந்த வருத்தம் அடைந்தேன். பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பிரதமரின் பொது நிவாரண நிதியிலிருந்து பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-ம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Prime Minister Narendra Modi has announced relief for the accident in which 14 people were killed when a truck hit devotees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.