ராஜஸ்தான் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி! மோடி, முர்மு இரங்கல்!
ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் மகாராஷ்டிரத்தின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியானது குறித்து...

மகாராஷ்டிரத்தின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சாலை விபத்தில் பலி - (Screengrab |X/ANI)
ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் மகாராஷ்டிரத்தின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தானின் கட்டு ஷ்யாம்ஜி கோயிலுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட மகாராஷ்டிரத்தின் தூலே மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்பட 16 பேரைக் கொண்ட குடும்பத்தினர், ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) அதிகாலை காரில் சொந்த ஊருக்குத் திரும்பினர்.
உதய்ப்பூர் - கோட்டா தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற அவர்களின் கார் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தச் சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இத்துடன், பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தோருக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, விபத்தில் சிக்கிய லாரியின் ஓட்டுநர் கூறுகையில், லாரி திடீரென பழுதானதால் சாலையோரமாக நிறுத்தியிருந்ததாகவும், கார் மோதியதில் அவர் 20 அடி தூரத்துக்குத் தூக்கிவீசப்பட்டு மயக்கமடைந்ததாகவும் கூறியுள்ளார்.
பின்னர், மயக்கம் தெளிந்த அந்த ஓட்டுநர் விபத்தில் சிக்கியவர்களை மீட்க அவசர ஊர்திக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Nine people from the same family from Maharashtra have died in a road accident in Rajasthan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


