குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை

கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகள் மற்றும் பேரன், பேத்தி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து...

suicide after jumping into a well near Karur

கோப்புப் படம்

Updated On :

கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகள் மற்றும் பேரன், பேத்தி ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அடுத்த சின்ன காளிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (63). விவசாயி. இவரது மனைவி ஜானகி (60). இவர்களுக்கு கண்ணன்(40) என்ற மகனும், சுகுணா(34) என்ற மகளும் உள்ளனர்.

கண்ணன் கரூர் வெங்கமேட்டில் தங்கி குடும்பத்துடன் வசித்து வருகிறார். சுகுணா கரூர் அடுத்த வேலாயுதம்பாளையத்தில் கணவர் பிரபு (38) மற்றும் மகள் சிவானி (10), மகன் ஆதிரன் (4) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுகுணா, தீபாவளி பண்டிகையின்போது தனது கணவரின் வீட்டில் பண்டிகை கொண்டாடாமல் சின்ன காளிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கொண்டாடியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்து கணவர் வீட்டுக்குச் சென்ற சுகுணாவுக்கும் அவரது கணவர் பிரபுக்கும் அடிக்கடி தகராறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவருடன் கோபித்துக் கொண்டு சுகுணா செவ்வாய்க்கிழமை காலை தனது குழந்தைகள் ஷிவானி மற்றும் ஆதிரன் ஆகியோருடன் சின்ன காளி பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனிடையே தனது மகளின் வாழ்க்கை சரியான முறையில் கிடைக்கவில்லையே என ராமசாமி தனது உறவினர்களிடம் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் ராமசாமி அவரது மனைவி ஜானகி, மகள் சுகுணா, பேத்தி சிவானி, பேரன் ஆதிரன் ஆகியோர் ராமசாமியின் வீட்டிற்கு அருகில் உள்ள அவர்களுக்கு சொந்தமான விவசாயக் கிணற்றில் புதன்கிழமை மாலை சடலமாக மிதந்துள்ளனர்.

இதனைக் கண்ட அப்பகுதியினர் உடனே கரூர் வாங்கல் காவல் நிலையத்திற்கும், கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் குதித்து சடலமாக மிதந்த ராமசாமி உள்ளிட்ட ஐந்து பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து குடும்பத்தகராறில் கிணற்றில் குதித்து ராமசாமி உள்ளிட்ட ஐந்து பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்ன காளிபாளையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Five members of the same family die by suicide after jumping into a well near Karur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.