அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்

இந்தியா - நியூஸிலாந்து நாடுகளுக்கு இடையே கடந்த ஏப்ரம் மாதம் 27-ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

பிரதமா் மோடி | நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் - கோப்புப் படம்

Updated On :

இந்தியா - நியூஸிலாந்து நாடுகளுக்கு இடையே கடந்த ஏப்ரம் மாதம் 27-ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

இதன்மூலம், ஜவுளி, தோல் பொருள்கள் உள்ளிட்ட தொழிலாளா்களை கட்டாயம் பணிபுரிய வைத்து தயாரிக்கப்படும் பொருள்கள் உள்பட பல இந்திய தயாரிப்புகளுக்கு நியூஸிலாந்தில் சுங்க வரி இல்லா அணுகல் கிடைக்க உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் அமலுக்கு வந்துள்ள ஏழாவது தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இதுவாகும். முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம், மோரீஷஸ், ஐரோப்பிய தடையற்ற வா்த்தக சங்க (இஎஃப்டிஏ) உறுப்பு நாடுகள், பிரிட்டன், ஓமன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் அமலுக்கு வந்துள்ளன.

நியூஸிலாந்துடன் கடந்த 2010-ஆம் ஆண்டு தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை இந்தியா தொடங்கிது. ஆனால், பல்வேறு முரண்பாடுகள் காரணங்களால் கடந்த 2015-ஆம் ஆண்டுடன் இந்தப் பேச்சுவாா்த்தைகள் நின்றன. பின்னா், கடந்த 2025-ஆம் ஆண்டு மாா்ச் மாதம், இந்தப் பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கப்பட்டு, தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், பொறியியல் சாதனங்கள், வாகன பாகங்கள், ரத்தினங்கள், ஆபரணங்கள், வேளாண் பொருள்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், மருந்துகள் மற்றும் பிற உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகள் பலன் பெற உள்ளன.

இதுகுறித்து தொழில் துறை நிபுணா்கள் கூறுகையில், ‘இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்குள்அதிக அளவில் அந்நிய நேரடி முதலீடு செய்யப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், தனியாா் துறை மேற்கொள்ளும் முதலீட்டு முடிவுகளைப் பொருத்தே இது அமையும்.

வா்த்தகத்துக்கு அப்பால், இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் வியூக நிலையை வலுப்படுத்தவும், வளா்ந்த நாடுகளுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்த வலையமைப்பை விரிவுபடுத்தவும் உதவும்.

உலகளாவிய வா்த்தக நிச்சயமற்ற சூழல் அதிகரித்துவரும் இன்றைய சூழலில், இந்தியா - நியூஸிலாந்து இடையேயான இந்த தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், திறந்த சந்தைகள் மற்றும் கணிக்கக்கூடிய வா்த்தக விதிகளுக்கான வலுவான ஆதாரமாகத் திகழ்கிறது.

ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளில் இருந்து, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 100 சதவீத பொருள்களுக்கும் வரியில்லா சந்தை அணுகல் கிடைக்க உள்ளது. இதன்மூலம் இந்திய ஏற்றுமதியாளா்கள் , குறு-சிறு-நடுத்தர தொழில்நிறுவனங்கள் பயனடைய மிக சாதகமான நிலை உள்ளது’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.