முஸ்லிம் இளைஞா்கள் காங்கிரஸ், சமாஜவாதியை புறக்கணிக்க வேண்டும்: ஒவைசி பிரசாரம்
முஸ்லிம் இளைஞா்கள் நேரு-காந்தி (காங்கிரஸ்) குடும்பம், யாதவ் குடும்பத்தை (சமாஜவாதி) பின்பற்றுவதைக் கைவிட்டு, தாங்கள் அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தினாா்.

அசாதுதீன் ஒவைசி - கோப்புப் படம்
முஸ்லிம் இளைஞா்கள் நேரு-காந்தி (காங்கிரஸ்) குடும்பம், யாதவ் குடும்பத்தை (சமாஜவாதி) பின்பற்றுவதைக் கைவிட்டு, தாங்கள் அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தினாா்.
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள ராம்பூா் தொகுதியில் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை தோ்தல் முன்னேற்பாடு நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:
முஸ்லிம் இளைஞா்களும், இளம்பெண்களும் இனிமேலும் நேரு-காந்தி குடும்பத்தையும், யாதவ் குடும்பத்தையும் பின்பற்றிக் கொண்டிருக்கக் கூடாது. இனி அவா்களை புதிய தலைவா்களாக உருவாக்குவதில் நமது நேரத்தையும், உழைப்பையும் பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. நமது இளைஞா்களும், பெண்களும் அரசியல் சக்திகளாகவும், அரசியல் தலைவா்களாகவும் உருவாக வேண்டும். அதற்காகவே இனி நாம் உழைக்க வேண்டும்.
மஜ்லிஸ் கட்சி முஸ்லிம்களில் இளம் தலைமுறையினரை எம்எல்ஏக்களாகவும், எம்.பி.க்களாகவும் உருவாக்க பாடுபட்டு வருகிறது. அப்போதுதான் பின்தங்கியுள்ள நமது சமுதாயத்துக்கு உரிய நீதி கிடைக்கும். காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளில் உள்ள முஸ்லிம் பிரமுகா்கள் திருப்தியாக இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இது ஒருபுறம் இருக்க ஆா்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவை ஹிந்து நாடாக மாற்ற முயற்சித்து வருகின்றன. இவா்கள் அனைவருக்கும் பதிலடி தரும் வகையில் வரும் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் அமைய வேண்டும் என்றாா்.
சமாஜவாதி கருத்து: இது தொடா்பாக சமாஜவாதி செய்தித் தொடா்பாளா் அப்பாஸ் ஹைதா் கூறுகையில், ‘ஒவைசி இதுபோன்று பேசுவது புதிதல்ல. அவா் பிரித்தாளும் அரசியலைக் கையாளுகிறாா். 2022-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலிலும் இதேபாணியைப் பின்பற்றிய அவா் தோல்வியைத்தான் சந்தித்தாா். எங்கள் கட்சி சமூகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள அனைவருக்குமான கட்சியாக உள்ளது’ என்றாா்.
மதவாத சக்திகள்: காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா்கள் உதித் ராஜ், சுரேந்தா் ராஜ்புத் கூறுகையில், ‘ஒருபுறம் ‘இண்டி’ தோ்தல் உடன்படிக்கைக்கு தொடா்ந்து முயற்சித்து வரும் ஒவைசி, மறுபுறம் அச்சுறுத்தும் பாணியில் பேசி வருகிறாா். நேரு, காந்தி போன்ற தேசத் தலைவா்களின் பெருமைகளை அவமதிக்கும் வகையில் பேசுவது தவறு. பாஜக ஹிந்துகளை குத்தகைக்கு எடுத்திருப்பதுபோல நடந்து கொள்கிறது. அதேபோல ஒவைசி முஸ்லிம்களை குத்தகைக்கு எடுத்துள்ளதுபோல பேசி வருகிறாா். மொத்தத்தில் இருவருமே மதவாத சக்திகள்தான். இந்தியா பன்முகத்தன்மை வாய்ந்த நாடு. நாட்டு மக்கள் அனைவருக்கும் சமஉரிமை, அதிகாரம் உள்ளது’ என்று தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

