நேருவுக்கு வழங்கிய செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் மறைவு! பிரதமர் மோடி இரங்கல்!
நேருவுக்கு வழங்கிய செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் மறைவு குறித்து...

பிரதமர் மோடியுடன் உம்மிடி எத்திராஜ். - படம்: எக்ஸ்
முன்னாள் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் இன்று (அக். 21) காலமானார்.
உம்மிடி எத்திராஜின் இறுதிச் சடங்குகள் பெசன்ட் நகரில் இன்று மாலை 4 மணியில் இருந்து 5 மணிக்குள் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு விஜய பாரதி என்ற மகளும் உதய் குமார் உம்மிடி, விஜயேந்திரன் உம்மிடி என்ற இரு மகன்களும் உள்ளனர்.
உம்மிடி எத்திராஜ் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவில், ”உம்மிடி எத்திராஜின் மறைவை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்த இவர், முன்னாள் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்தமைக்காக என்றும் நினைவுகூரப்படுவார்.
பல ஆண்டுகளுக்குப் பின்பு, 2023-ல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அந்த செங்கோலுக்கு உரிய கௌரவத்தை வழங்கி சிறப்பிக்கும் வாய்ப்பு எங்கள் அரசுக்கு கிடைத்தது. அப்போது திரு உம்மிடி எத்திராஜை சந்தித்து, நமது நாட்டிற்கும் கலாசாரத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நன்றி தெரிவிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அவரது வாழ்க்கையும், கலைத்திறனும், இந்தியாவின் பெருமைமிக்க வளமான பாரம்பரியத்திற்கும் நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கும் இடையிலான போற்றத்தக்க தொடர்பை பிரதிபலிக்கின்றன. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Ummidhi Ethiraj, who designed the historic scepter presented to former Prime Minister Nehru, passed away today (Oct. 21).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


