சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

தேவாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பு! திருமாவளவன் இரங்கல்!

இசை உலகின் இழப்பாக தேவாவின் மறைவு - திருமாவளவன் உருக்கம்

Thirumavalavan says

திருமாவளவன் - file photo

Updated On :

தேவாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பு என திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவின் மறைவு மிகுந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்தவர் அவர். 75 வயதிலும் புகழுடன் திகழ்ந்தவர். தமிழ் மக்களின் பேராதரவையும் அன்பையும் பெற்றவர். அவர் இன்று நம்மிடையே இல்லை என்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவரது இழப்பு திரையுலகிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பல்வேறு மொழிகளில் இசையமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கான புகழ்பெற்ற அறிமுகப் பாடலையும் உருவாக்கியவர் தேவா. இன்றளவும் அந்தப் பாடல் ரஜினிகாந்த்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, ரஜினிகாந்த்தின் திரைப்பயணத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். தேவாவை இழந்து வாடும் அவரது மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விலைவாசி உயர்வு எளிய மக்களை வெகுவாகப் பாதிக்கும். குறிப்பாக, அரிசியின் விலை உயரும்போது ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு மாநில அரசு மட்டுமல்லாமல், மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வும் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. எனவே, எளிய மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு, ஒன்றிய அரசும் மாநில அரசும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விலைவாசி உயர்வுக்கு ஒரு குறிப்பிட்ட அரசையோ அல்லது ஆட்சியாளர்களையோ மட்டுமே முழுமையாகப் பொறுப்பாக்க முடியாது. அவர்கள் மீது மட்டும் குற்றம் சுமத்துவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கும். உலகச் சந்தையில் நிலவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலைவாசி உயர்வுக்குப் பின்னணியில் இருக்கலாம். இருப்பினும், சாதாரண மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் ஆந்திரம், கர்நாடக முதல்வரை சந்தித்து நதிநீர் இணைப்பு குறித்துப் பேசி உள்ளார். தண்ணீர் இல்லாத சூழலில் இது குறித்துப் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு:-

நதிநீர் இணைப்பு என்பது நீண்ட கால திட்டம். இதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் இயற்கைக்கு எதிராக இருக்கும் எனச் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இது குறித்து வேண்டுமானால் நாம் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ கருத்துச் சொல்லலாம். ஆனால் நதிநீர் இணைப்பே கூடாது, இப்போதைக்குத் தண்ணீர் இல்லை ஆகவே இந்த பேச்சுவார்த்தை பயனற்றது எனக் கூறுவது அரசியல் அடிப்படையிலான விமர்சனம்.

தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்ததுடன், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது திமுக என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, இந்த சட்டத்திற்கு ஒப்புதல் பெற பாஜக அரசு முயல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

ஏற்கெனவே எடுத்த அதே நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்கும் என்று நம்புகிறேன். தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அப்படியே நிலைநிறுத்தப்பட வேண்டும். எந்த வகையிலும் அந்த எண்ணிக்கையை அதிகரிப்பது தேசத்தின் நலன்களுக்கும் ஜனநாயகத்திற்கும் உகந்ததல்ல என்பதுதான் எங்களது நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER