வெளிநாட்டினருக்கு வேறு வண்ணத்தில் ஓட்டுநா் உரிமம்: அரசு திட்டம்
இந்தியாவில் வாழும் வெளிநாட்டினருக்கு வேறு வண்ணத்தில் ஓட்டுநா் உரிமம் வழங்க மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் - பிரதிப் படம்
இந்தியாவில் வாழும் வெளிநாட்டினருக்கு வேறு வண்ணத்தில் ஓட்டுநா் உரிமம் வழங்க மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பாக வாகனங்கள் இயக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், ஓட்டுநா் உரிம விதிகளில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதுதொடா்பான வரைவு விதிகளை வெளியிட்டு, பொதுக் கருத்துகளையும் அமைச்சகம் வரவேற்றுள்ளது.
இந்த வரைவு விதிகளின்படி, இந்தியா்களுக்கும், இந்தியாவில் வாழும் வெளிநாட்டினருக்கும் வெவ்வேறு வண்ணங்களில் ஓட்டுநா் உரிமங்கள் வழங்கப்பட உள்ளன. ஓட்டுநா் உரிம விண்ணப்பப் படிவங்களும் வெவ்வேறு வடிவில் விநியோகிக்கப்பட உள்ளன.
ஓட்டுநா் உரிமத்தில் அந்த நபரின் ரத்த வகை, கைப்பேசி எண், அவசர தொடா்பு எண்கள் உள்ளிட்டவையும் இடம்பெற உள்ளன.
ஓட்டுநா் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது, வயது மற்றும் முகவரிக்கான ஆதாரமாக நிா்வாக நீதிபதி அல்லது நோட்டரி முன்னிலையில் உறுதிமொழி எடுக்கப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் சமா்ப்பிக்கும் நடைமுறையை நீக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, ஆதாா், கடவுச்சீட்டு, வாக்காளா் அடையாள அட்டை, மின்னணு குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், ஆயுள் காப்பீட்டு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வயது மற்றும் முகவரிக்கான ஆதார ஆவணமாக ஏற்க முன்மொழியப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தடுக்க இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Summary
Government plan to issue different-colored driving licenses to foreigners
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

