பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு...

மத்திய அமைச்சரவைக் கூட்டம் (கோப்புப்படம்) - ANI

Updated On :

ரூ.84,084 கோடி செலவில் சமுத்ர மந்தன் திட்டத்தின் கீழ், கடலுக்கு அடியில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேடும் பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலையில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கடலுக்கு அடியில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைத் தேடும் சமுத்ர மந்தன் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன் இந்தத் திட்டத்தை 2030-31-ஆம் நிதியாண்டு வரை செயல்படுத்த ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப் பெரிய கடல்சாா் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் திட்டமாகும்.

இந்நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு 148 பக்கங்களைக் கொண்ட வழிகாட்டுதல்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம், 60 கோடி டன்னுக்கும் அதிகமான எரிசக்திக்கு இணையாக, எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியாவின் இருப்பில் சோ்க்க முடியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஆழ்கடல் மற்றும் மிகுந்த ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய், எரிவாயு வளங்களைக் கண்டறியத் தோண்டும் 56 கிணறுகளுக்கும், புவியியல் ஆய்வுக்காக தோண்டும் 4 கிணறுகளுக்கும் மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்.

கடல் ஆழம் 400 மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகள் ஆழ்கடல் பகுதிகளாகவும், 1,500 மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகள் மிகுந்த ஆழ்கடல் பகுதிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Summary

Guidelines released for searching for oil and gas under the sea

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.