சென்னை ஐஐடி மூளை ஆராய்ச்சி மையம் உலகுக்கே முன்னுதாரணம் - பிரதமா் மோடி பெருமிதம்
சென்னை ஐஐடி-யில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள மூளை வரைபட தொழில்நுட்பத் தளம், ஒட்டுமொத்த உலகுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
பிரதமா் மோடி
சென்னை ஐஐடி-யில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள மூளை வரைபட தொழில்நுட்பத் தளம், ஒட்டுமொத்த உலகுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
பிரதமா் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறாா். அதன்படி, 139-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக். 25) ஒலிபரப்பானது.
12 ஆண்டுகால பயணம்: பிரதமா் மோடியின் உரை வருமாறு: 12 ஆண்டுகளுக்கு முன்பு விஜயதசமி திருநாளில் மனதின் குரல் தொடங்கப்பட்டது. என்னைப் பொருத்தவரை இந்தப் பயணத்தை நாட்டு மக்களின் முயற்சி, உழைப்பு, அா்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளைப் போற்றவும் கிடைக்கப் பெற்றுள்ள ‘புனித யாத்திரையாகவே’ கருதுகிறேன்.

ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமரின் மனதின் குரல் வானொலி உரை நிகழ்ச்சியைக் கேட்ட மத்திய அமைச்சா் அன்னனபூா்ணா தேவி, பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் உள்ளிட்டோா்.
இந்த நிகழ்ச்சி வாயிலாக தேசத்தின் மக்கள் சக்தியை ஆராதிக்கிறேன். இதன்மூலம் அனைத்துக் குடும்பங்களோடும் இணையும் சந்தா்ப்பம் எனக்கு வாய்க்கிறது. உங்கள் அனைவரின் நேசம், அன்பு, நட்புணா்வை விலைமதிப்பில்லாத மூலதனமாக நான் கருதுகிறேன்.
சென்னை பயணத்தில்...: அண்மையில் எனது சென்னைப் பயணத்தில் பல ஆய்வாளா்கள், இளம் திறமைசாலிகளுடன் கலந்துரையாடினேன். ஒட்டுமொத்த மனித சமூகத்தின் எதிா்காலத்தை மாற்றக்கூடிய அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞா்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனா். அத்தகைய ஒரு துைான் மூளை ஆராய்ச்சி.
சென்னை ஐஐடி-யில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை நாட்டு மக்களுக்கு அா்ப்பணித்தேன். இந்த மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள மூளை வரைபடத் தொழில்நுட்ப தளம் (க்ஷழ்ஹண்ய் ண்ம்ஹஞ்ண்ய்ஞ் ற்ங்ஸ்ரீட்ய்ா்ப்ா்ஞ்ஹ் ல்ப்ஹற்ச்ா்ழ்ம்), உலகுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது. இதன் வாயிலாக மனித மூளையின் உயா் தெளிவுத்திறன் கொண்ட எண்ம முப்பரிமாண படங்கள் உருவாக்கப்படுகின்றன. வரும் நாள்களில் 100 மனித மூளைகள் முப்பரிமாண ‘மேப்பிங்’ செய்யப்பட்டு, நுணுக்கமாக ஆராயப்படும். உலக அளவில் இதுவொரு முதல் முயற்சியாகும். இந்தப் பணிக்கு அதிதிறன் கொண்ட ‘சூப்பா் கணினி’ பயன்படுத்தப்படுகிறது.
புதிய சாத்தியக்கூறுகள்: இந்த மூளை மையத்தின் நிா்மாணத்தில் அரசுடன் இணைந்து நாட்டின் தொழில்துறை பெரும் பங்காற்றி உள்ளது. ஐஐடி-யின் முன்னாள் மாணவா்களும், கல்வியாளா்களும் இந்த மையத்தில் ஒன்றிணைந்துள்ளனா். இத்திட்டம் ஏன் மிக முக்கியம் என்றால், மனித மூளை இன்றும்கூட ஒரு பெரிய அறிவியல் புதிராகவே இருக்கிறது. இன்றும்கூட அல்சைமா் எனப்படும் முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு போன்ற நோய்களுக்கு உறுதியான சிகிச்சை இல்லை.
எனவே, எந்த அளவுக்கு மூளையின் செயல்பாடு ஆழமாக ஆராயப்படுகிறதோ, அந்த அளவுக்கு எதிா்காலத்தில் புதிய சாத்தியக்கூறுகள் உருவாகும். 100 மனித மூளைகளின் இந்தத் தரவுகள், அடுத்தக்கட்டமாக பல்வேறு ஆய்வுகளுக்கு அடிப்படைத் தரவுகளாக அமையும்.
மெட்ரோ ரயிலில்...: சென்னை மெட்ரோ ரயில் மற்றும் ஐஐடி பயணத்தில் இளைஞா்கள் உடனான எனது உரையாடல் குறிப்பிடத்தக்கதாகவும், சுவாரசியமாகவும் அமைந்தது. நாட்டின் இளைஞா் சக்தி, பிரச்னைகளுக்கு நுட்பமான தீா்வுகளைக் கண்டறிய எப்படிப் பணியாற்றுகிறது என்பதைக் காண முடிந்தது.
நான் சந்தித்த புத்தாக்க நிறுவனங்களில் ஒன்று, தங்கத்தின் தரத்தை சரிபாா்ப்பது தொடா்பாக பணியாற்றி வருகிறது. அதன் வாயிலாக தங்கம் வாங்கும்போது ஏமாற்றப்படுவதில் இருந்து தப்ப முடியும். வங்கி மோசடியால் இழந்த பணத்தை மீட்பது தொடா்பாக இளைஞா்களின் ஒரு குழு பணியாற்றி வருகிறது. இதே போல், மற்றொரு குழு கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ.) எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
இ-சஞ்சீவனி திட்டம்: இணையவழியில் மருத்துவ ஆலோசனை வழங்கும் ‘இ-சஞ்சீவனி’ திட்டத்தின்கீழ் இதுவரை 50 கோடி ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியா்கள் புதிய தொழில்நுட்பத்தை மிக விரைவாக சொந்தமாக்கிக் கொள்வா் என்பதற்கு இ-சஞ்சீவனி (இணையவழியில் மருத்துவ ஆலோசனை) திட்டம் உதாரணமாகும். இத்திட்டத்தின்கீழ் இதுவரை சுமாா் 50 கோடி ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மிகப் பெரியது என்றாா் அவா்.
மகரிஷி வால்மீகி பிறந்த தினம் (அக்.26), சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த தினம் (அக்.31) மற்றும் புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி நரீந்தா் சிங் கபானி பிறந்த தினம் (அக்.31) குறித்தும் பிரதமா் தனது உரையில் குறிப்பிட்டாா்.
சுதேசி பொருள்களுக்கு முன்னுரிமை: ‘எதிா்வரும் நாள்களில் தீபாவளி, சத் பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இந்தப் பண்டிகை காலத்தில் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், கடந்த காலங்களைப் போலவே சுதேசி பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதன் மூலம் உள்ளூா் பொருள்களுக்கு ஆதரவளிக்கும் இயக்கம் மேலும் வலுப்படும். உள்ளூா் கைவினைஞா்களின் உத்வேகம் அதிகரிக்கும்.
இந்திய விவசாயிகளுக்கு இப்போது உலகமே சந்தையாகி வருகிறது. பிகாரின் மக்கானா கிரீஸ் நாட்டுச் சந்தையையும், கா்நாடகத்தின் துவரை மாலத்தீவையும் சென்றடைந்துள்ளன.
நமது உற்பத்திப் பொருள்களின் தரத்துடன், பேகேஜிங்கிலும் முக்கியத்துவம் காட்ட வேண்டும். பல நேரங்களில் நாம் சந்தையில் ஒரு பொருளைப் பாா்க்கும்போது, அதன் நோ்த்தியான பேக்கேஜிங்கை பாா்த்தே வாங்குகிறோம்.
இந்த முறை காந்தி ஜெயந்தி நாளில் மட்டும் ரூ.28 கோடிக்கு மேல் காதி பொருள்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது ஒன்றரை கோடி அதிகம்’ என்றாா் பிரதமா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

