போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகல்!9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம் (அக். 26) பிரேஸில் அதிபர் தேர்தல்: லூலா டாசில்வா மீண்டும் வெற்றிவங்கக் கடலில் உருவானது 'அர்னாப்' புயல்!

நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு அடையாள அட்டை தயார்: இதனால் பயன் என்ன? - சிவராஜ் சிங் சௌஹான்

வேளாண் தொழில்நுட்ப திட்டத்தின் கீழ், 11 கோடி விவசாயிகளுக்கு 11 இலக்க தனித்துவ அடையாள எண்கள் உருவாக்கப்பட்டுள்ளது குறித்து...

First Installment of ₹25,863 Crore to States for VB-G-RAM-G

மத்திய வேளாண்மை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் - டிஎன்எஸ்

Updated On :

புதுடில்லி: மத்திய அரசின் 'அக் ரிஸ்டேக்' வேளாண் தொழில்நுட்ப திட்டத்தின் கீழ், 11 கோடி விவசாயிகளுக்கு 11 இலக்க தனித்துவ அடையாள எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சௌஹான் கூறியதாவது:

டிஜிட்டல் வேளாண் இயக்கத்தின் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, 'அக்ரிஸ்டேக்' திட்டத்தின்கீழ் 11 கோடி விவசாயிகளுக்கு 11 இலக்க அடையாள எண்கள் கொண்ட அட்டைகள் வழங்கப்பட உள்ளன. கடந்த 23 ஆம் தேதி 11 கோடி விவசாயிகளுக்கு அடையாள எண்கள் உருவாக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

வரும் 2027 மார்ச் 31 ஆம் தேதிக்குள், 11 கோடி விவசாயிகளுக்கு அடையாள எண்கள் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்திருந்தார். ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே, இலக்கு எட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனையை, வளமான விவசாயிகளுடன் கூடிய வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்று சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.

மைல்கல் சாதனை

மத்திய வேளாண் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் வேளாண் இயக்கத்தின் கீழ், இந்த மைல்கல் சாதனை எட்டப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஒரு தனித்துவ டிஜிட்டல் அடையாளத்தை வழங்குவதற்காக, இந்த விவசாயி அடையாள அட்டைத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் கள அளவிலான அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, திட்டமிட்ட காலத்திற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே இந்த இலக்கை அடைந்துள்ளனர். இந்தச் சாதனைக்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், விவசாயி அடையாள அட்டையை அவர்களின் சொந்த டிஜிட்டல் அடையாளம் என்றும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்தை மேலும் திறமையானதாகவும், வெளிப்படையானதாகவும், செழிப்பானதாகவும் மாற்றுவதற்கான ஒரு முக்கியப் படி என்றும் அவர் கூறினார்.

மேலும், விவசாயிகள் மீண்டும் மீண்டும் அரசு அலுவலகங்களுக்கும் வங்கிகளுக்கும் செல்வதையோ அல்லது வெவ்வேறு திட்டங்களுக்காக ஒரே ஆவணங்களைச் சமர்ப்பிப்பதையோ விவசாயி அடையாள அட்டை முறை கணிசமாகக் குறைக்கும் என்று சௌஹான் கூறினார்.

முன்னதாக, விவசாயிகள் பல்வேறு பலன்களைப் பெறுவதற்காக அடிக்கடி ஆவணங்களை வழங்க வேண்டியிருந்தது, இதன் விளைவாக நேரமும் பணமும் வீரயமாகின. விவசாயி அடையாள அட்டைகள் மூலம், பல முக்கிய சேவைகளைப் பெறுவது எளிமையாகவும் மேலும் வெளிப்படையாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடன் பெறும் செயல்முறை எளிதாகும், இதனால் மீண்டும் மீண்டும் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டிய தேவை குறையும்.

அட்டையின் பயன்கள்

காகிதப் பயன்பாட்டை குறைப்பதுடன், அரசுத் திட்டங்கள், வங்கி கடன்கள், பயிர்க் காப்பீடு, மற்றும் பேரிடர் நிவாரண உதவிகள் பெறுவதற்கும், வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கும், உரம் உள்ளிட்ட இடுபொருட்களை வாங்குவதற்கும் எந்தவொரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை. இடைத்தரகர்களின் பங்கை நீக்க உதவுவதோடு, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய முழு மதிப்பைப் பெறுவதையும் உறுதி செய்யும். இந்த அடையாள அட்டையில் உள்ள எண்ணை பயன்படுத்தி அரசின் சலுகைகளை பெறுவதற்கு வழிவகுக்கிறது. மேலும் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். நிவாரண உதவிகள், உண்மையான மற்றும் தகுதியுள்ள விவசாயிகளை மிக விரைவாகச் சென்றடையும்.

வேளாண் சேவை வழங்குதலில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை வலுப்படுத்துவது, தகுதியுள்ள எந்தவொரு விவசாயியும் அரசின் நலத்திட்டங்களிலிருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளே இந்தச் சாதனைக்குக் காரணம் எனக் கூறிய சௌஹான், இது கூட்டுறவு கூட்டாட்சிக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்றும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை முன்கூட்டியே அடைவதற்குப் பங்களித்த மத்திய அரசு அதிகாரிகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், மாவட்ட அளவிலான குழுக்கள் மற்றும் கிராமங்கள் முழுவதும் பணியாற்றிய களப்பணியாளர்கள் ஆகியோருக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்து நன்றி கூறினார்.

In a major milestone for digital agriculture, the Government of India has achieved its target of creating 11 crore Farmer IDs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.