“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு!டீலக்ஸ், புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து தொடக்கி வைத்த முதல்வர்!ஆசிய விளையாட்டு! இந்திய வில்வித்தை அணிக்கு தங்கம்!ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் லவ்லினா!காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்

ஜனநாயகத்தை அல்ல, வாரிசு அரசியலைக் காக்க காங்கிரஸ் விரும்புகிறது: சிவராஜ் சிங் சௌஹான்!

ஜனநாயகத்தைக் காப்போம் பேரணி பற்றி சௌஹான் குற்றச்சாட்டு..

Shivraj Singh Chouhan

வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் - கோப்புப் படம்

Published On :

காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகத்தைக் காப்போம் பிரசாரம், வாரிசு அரசியலைக் காக்கும் பயணம் என்று வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் விமர்சித்தார்.

வாக்காளர் பட்டியல் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த கவலைகள் தெரிவித்து, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அக்டோபர் 2 முதல் 8 வரை 'ஜனநாயகத்தைக் காப்போம்' பேரணிகளை அறிவித்துள்ள நிலையில், சிவராஜ் சிங் சௌஹானின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு கோவாவில் உள்ள மோபா மனோகர் சர்வதேச விமான நிலையத்தில் செய்திளார்களிடம் பேசிய சௌஹான்,

வாக்காளர் பட்டியலைச சீரமைக்கும் சிறப்புத் தீவிர மறு ஆய்வுப் பணியை நியாயப்படுத்தினார். இறந்தவர்கள் ஒரு பெயரில் பலமுறை பதிவு செய்யப்பட்டவர்கள் அல்லது நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கக்கூடாது.

காங்கிரஸ் இன்று புதிய நாடகத்தைத் தொடங்கியுள்ளது. அதுதான் ஜனநாயகத்தைக் காக்கும் பயணம்.

இது ஜனநாயகத்தைக் காக்கும் பயணம் அல்ல, வாரிசு அரசியலைக் காக்கும் பயணம். குடும்ப அரசியலைக் காக்கும் பயணம்.

காங்கிரஸ் கட்சி அராஜகத்தையும், பொய்களையும் பரப்புவதாகவும், வெளிநாடுகளில் நாட்டின் நற்பெயரைக் கெடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அவசரநிலை காலகட்டத்தைக் குறித்தும் காங்கிரஸை விமர்சித்த அவர், அக்கட்சி 50-க்கும் மேற்பட்ட முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கலைத்ததாகவும், அடிக்கடி முதலமைச்சர்களை மாற்றியதாகவும் குற்றம் சாட்டினார்.

வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டால், காங்கிரஸ் கட்சியே அதை எதிர்க்கிறது. ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி 99 தேசிய மற்றும் மாநிலத் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது.

காங்கிரஸைக் கலைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இப்போது மக்களே காங்கிரஸைக் கலைப்பார்கள். கோவா காங்கிரஸில் நிலவும் உட்கட்சிப் பூசல்களே தொண்டர்கள் கட்சியை விட்டு வெளியேறக் காரணமாக அமைகின்றன.

காந்தி ஜெயந்தியையொட்டி மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்திய அவர், தூய்மைப் பணித் திட்டம் புதிய உற்சாகத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER