தந்தை பெயருக்கு பதில் ராம் யாதவை அடித்தார் என்ற வாக்கியம்! மன்னிப்புக் கோரிய தேர்தல் ஆணையம்
தந்தை பெயருக்கு பதிலாக ராம் யாதவை அடித்தார் என்ற வாக்கியம் இடம்பெற்றிருந்ததற்கு மன்னிப்புக் கோரிய தேர்தல் ஆணையம்

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்காக வெளியான வாக்காளர் பட்டியலில் ரவி ஷர்மா என்பவரின் தந்தை பெயருக்கு பதிலாக ராம் யாதவை அடித்தார் என்று தவறுதலாக அச்சடிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
இந்த தவறுக்கு மன்னிப்புக் கோரியிருக்கும் உத்தரப்பிரதேச தேர்தல் ஆணையம், நல்லவேளையாக, ராம் எந்த சிறுபான்மையினரையும் கொல்லவில்லை என்று பதிலளித்துள்ளது.
உத்தரப் பிரதேச தேர்தல் ஆணையம், வாக்காளர் சீட்டில் ஏற்பட்ட பிழை குறித்து வெளியிட்ட விளக்கத்தில், மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில், சாதி ரீதியான கருத்துக்காக மன்னிப்புக் கோருகிறோம் என்று பதிவிட்டிருந்தது.
அண்மையில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியலில், "ராம் நே சர்மா கோ மாரா" (Ram ne Sharma ko mara) என்ற விசித்திரமான பெயர் ஒன்று இடம்பெற்றுள்ளது. கணினிகளுக்கோ அல்லது மென்பொருளுக்கோ சாதி உணர்வு கிடையாது. தவறு நடந்திருக்கலாம், ஆனால் அதிர்ஷ்டவசமாக, அந்தத் தவறு நிகழ்ந்தபோதும் சாதி அடிப்படையிலான பாகுபாடு எதுவும் இருக்கவில்லை. 'ராம்' எந்தவொரு சிறுபான்மையினரையும் கொல்லவில்லை என்பதற்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்; இல்லையெனில், சாதிவெறி கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டுடன், மதவெறி கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கும் என்று தேர்தல் ஆணையம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக, வாக்காளர் பட்டியலில், ரவி ஷர்மா என்பவரின் தந்தை பெயர் ராம்ஹித் யாதவ் (Ramhit Yadav) என்பதற்குப் பதிலாக "ராம் நே யாதவ் கோ மாரா" (Ram ne Yadav ko Maara) என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இதற்கு ராம், யாதவை அடித்தார் என்று பொருள். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங், தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாரை விமர்சித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் விடியோ வெளியிட்டிருந்தார்.
உத்தரப் பிரதேச சட்ட மேலவைத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியலில் இவ்வாறு இடம்பெற்றிருந்தது. இந்தத் தவறைச் சுட்டிக்காட்டிய சஞ்சய் சிங், இந்தியத் தேர்தல் ஆணையம் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்தி வருகிறதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், ஞானேஷ் குமார், ராம் ஏன் யாதவ் இனத்தைச் சேர்ந்தவரை மட்டும் தாக்கினார்? அவர் ஏன் சிங், பதக், அஸ்தானா, சர்மா, ராய் அல்லது பிஷ்ட் ஆகிய பிரிவினர் யாரையும் தாக்கவில்லை? உங்கள் கணினி சாதிவெறி கொண்டதா? அல்லது நீங்கள் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்தி வருகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தவறுக்கு உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரி மன்னிப்புக் கேட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

