உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

தமிழகத்தில் இரு சட்டவிரோத "சிம் பாக்ஸ்' மையங்கள் கண்டுபிடிப்பு: கர்நாடக காவல் துறை நடவடிக்கை

தமிழகத்தில் இரு சட்டவிரோத "சிம் பாக்ஸ்' மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றி...

கோப்புப்படம்.

Updated On :

தொலைத்தொடர்பு இணைப்புகளைப் பயன்படுத்தி சர்வதேச அழைப்புகள் மற்றும் இணையவழி தகவல் தொடர்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் சட்டவிரோத சிம் பாக்ஸ் மையங்கள் தொடர்பான விசாரணையில், தமிழகத்தின் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் மேலும் 2 மையங்களை கர்நாடக காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அங்கிருந்து "இ}சிம்' வசதி கொண்ட 10 சிம் பாக்ஸ் சாதனங்களை போலீஸôர் பறிமுதல் செய்தனர்.

சிம் பாக்ஸ் என்பது ஒரே சாதனத்தில் பல சிம் அட்டைகளைப் பொருத்தி, இணையவழித் தொழில்நுட்பம் மூலம் தொலைபேசி அழைப்புகளைத் திருப்பிவிட பயன்படுத்தப்படும் கருவியாகும்.

சட்டபூர்வமாக உரிமம் பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வழக்கமான கட்டமைப்புக்கு வெளியே இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்தி, அழைப்புகளின் உண்மையான மூலத்தை மறைப்பது, சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவது, போலி எண்கள் மூலம் தொடர்புகொள்வது போன்ற செயல்களில் ஈடுபட முடியும். இதன்மூலம், தொலைத்தொடர்பு விதிமீறல்கள் மற்றும் இணையவழி மோசடி மற்றும் குற்றங்களுக்கு இவை பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

இருப்பினும், சிம் பாக்ஸ் சாதனங்களைப் பயன்படுத்துவது மட்டுமே குற்றமாகாது; உரிய அனுமதியின்றி அல்லது சட்டவிரோத நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துவதே சட்டப் பிரச்னையாகும். இந்நிலையில், பெங்களூரு, ஒயிட்ஃபீல்டு காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய சட்டவிரோத சிம் பாக்ஸ் வலையமைப்பு குறித்து சைபர் கமாண்ட் பிரிவு போலீஸôர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் தொடக்கத்தில், பெங்களூரின் காடுகோடி, பட்டந்தூர் அக்ரஹாரா ஆகிய பகுதிகளில் சிம் பாக்ஸ் சாதனங்கள் செயல்படுத்தப்பட்டு வந்த 2 இடங்களை போலீஸôர் கண்டறிந்தனர். அங்கிருந்து மொத்தம் 10 சிம் பாக்ஸ் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்கள், தொலைத்தொடர்பு பதிவுகள் மற்றும் தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்களை போலீஸôர் ஆய்வு செய்தனர். இந்தச் செயல்பாடுகள் பெங்களூருடன் மட்டும் முடிவடைந்துவிட்டனவா அல்லது பிற பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளனவா என்பதை அறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தின் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் இதேபோன்ற செயல்பாடுகள் நடைபெறுவது குறித்த தடயங்கள் கிடைத்தன. இதுதொடர்பான தகவல்கள் தொலைத்தொடர்பு துறையுடன் பகிரப்பட்டன.

இதையடுத்து, பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், தமிழகத்தின் இரு மாவட்டங்களிலும் மேலும் 2 சட்டவிரோத சிம் பாக்ஸ் மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அங்கிருந்து இ}சிம் வசதி கொண்ட மேலும் 10 சிம் பாக்ஸ் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பெங்களூரு மாநகர காவல் துறையின் சைபர் கமாண்ட் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வலையமைப்பின் முழுமையான செயல்பாட்டு சங்கிலியைக் கண்டறிவதே விசாரணையின் நோக்கம் என போலீஸôர் தெரிவித்துள்ளனர்.

சிம் பாக்ஸ் சாதனங்கள் எங்கிருந்து வாங்கப்பட்டன, அவை எவ்வாறு பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டன, சிம் அட்டைகள் மற்றும் இ}சிம் சுயவிவரங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, தொடர்புடைய தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் என்னென்ன என்பன குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்தச் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பவர்கள் அல்லது கட்டுப்படுத்துபவர்கள் யார், அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்பதையும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மற்றும் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மையங்களுக்கு இடையிலான தொடர்புகள், வெளிநாடுகளில் இருந்து செயல்பாடுகளை வழிநடத்துபவர்கள், உள்ளூர் உதவியாளர்கள் ஆகியோர் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனுடன் தொடர்புடைய பிற இடங்கள் மற்றும் கட்டமைப்புகள் உள்ளனவா என்பதையும் போலீஸôர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.