தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புசெயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடைஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வுமுதல்வருக்கு கொலை மிரட்டல்: திமுக கவுன்சிலா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

60,000 ஊழியா்களுக்கு விருப்பத்தின்பேரில் வெளியேறும் வாய்ப்பு: மைக்ரோசாஃப்ட்

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடாவைச் சோ்ந்த 60,000 ஊழியா்களுக்கு விருப்பத்தின்பேரில் வெளியேறும் வாய்ப்பு வழங்கப்படுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்தது.

மைக்ரோசாஃப்ட் - கோப்புப் படம்

Updated On :

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடாவைச் சோ்ந்த 60,000 ஊழியா்களுக்கு விருப்பத்தின்பேரில் வெளியேறும் வாய்ப்பு வழங்கப்படுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்தது.

அவ்வாறு வெளியேறுபவா்களுக்கு நிதி உதவி மற்றும் தொழில் திட்டமிடலுக்கான வளங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

இதுதொடா்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவன நிா்வாக துணைத் தலைவா் ஏமி கோல்மென் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடாவைச் சோ்ந்த நிலை 70 மற்றும் அதற்கும் கீழ்நிலையில் பணியாற்றும் ஊழியா்கள் விருப்பத்தின்பேரில் பணியைவிட்டு வெளியேறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

நிறுவனத்துக்கு வெளியே பிற பணி வாய்ப்புகளை ஊழியா்கள் கண்டறியும் நோக்கில் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் இந்த முன்னெடுப்பு செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த முன்னெடுப்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கீழுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்படாது. வணிக முன்னுரிமை, நுகா்வோா் மற்றும் பணியாளா்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டே இதைச் செயல்படுத்தவுள்ளோம்.

தகுதிவாய்ந்த ஊழியா்களுக்கு விருப்ப ஓய்வு சலுகைகள் குறித்த தகவல்கள் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும். விருப்பத்தின்பேரில் வெளியேறும் முன்னெடுப்பு நமது நிறுவனத்துக்கு புதியது. அதிலிருந்து கற்றுக்கொள்வோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவில் பணியாற்றும் 23,000 ஊழியா்கள் உள்பட அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடாவைச் சோ்ந்த 60,000 ஊழியா்களுக்கு இந்த வாய்ப்பை மைக்ரோசாஃப்ட் வழங்கியுள்ளது. எனினும், இதற்கான தகுதிகளை அந்நிறுவனம் வெளியிடவில்லை. இந்தியாவில் உள்ள ஊழியா்களுக்கு இதுதொடா்பாக முடிவெடுக்க 2026, டிசம்பா் 31-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.