புகழ்பெற்ற நாவலாசிரியர் ஜெஃப்ரி ஆர்ச்சர் காலமானார்!
பிரபல பிரிட்டன் எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் காலமானார்..
ஜெஃப்ரி ஆர்ச்சர். - (கோப்புப்படம்)
பிரபல பிரிட்டன் எழுத்தாளரும் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான ஜெஃப்ரி ஆர்ச்சர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.
இங்கிலாந்தின் பழமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றிய ஜெஃப்ரி, 'நாட் ஏ பென்னி மோர், நாட் ஏ பென்னி லெஸ்' (Not a Penny More, Not a Penny Less), 'கேன் அண்ட் ஏபெல்' (Kane and Abel) மற்றும் 'தி க்ளிஃப்டன் க்ரானிகல்ஸ்' (The Clifton Chronicles) போன்ற உலகப் புகழ்பெற்ற நாவல்களை எழுதியுள்ளார்.
1940 ஆம் ஆண்டு ஏப். 15 ஆம் தேதி லண்டனில் பிறந்த ஜெஃப்ரி ஆர்ச்சர், எழுத்தாளராகத் தன்னுடைய 50 ஆண்டுகால பயணத்தில் 30 கோடிக்கும் அதிகமான புத்தகங்களை விற்பனை செய்து சாதனை படைத்தவர். எழுத்து, அரசியல், சிறை வாழ்க்கை எனப் பல திருப்பங்கள் நிறைந்த இவருடைய வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்துக்கான முடிவை ஹார்பர்காலின்ஸ் பதிப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த செல்டென்ஹாம் இலக்கிய விழாவில் ‘ஆதாம் மற்றும் எவாள்’ குறித்து பேசவிருந்தார் ஆர்ச்சர். கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்த ஆர்ச்சர், அவர்களின் புத்தங்களில் கையொப்பமிட்டு கொடுத்ததாக பிரிட்டனைச் சேர்ந்த ‘தி சன் டேப்ளாய்ட்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோதே பழமைவாதக் கட்சியில் இணைந்த ஆர்ச்சர், 1969-ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, தனது 29-வது வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினரானார். அதன்பின்னர் அக்கட்சியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.
2001 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பொய் சாட்சியம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்றார். 2003-ஆம் ஆண்டில் சிறையிலிருந்து விடுதலையான அவர், 2024-இல் ஓய்வு பெறும் வரை இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தின் மேலவை (House of Lords) உறுப்பினராகத் தொடர்ந்தார். 2014-ல் தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாகவும் ஆர்ச்சர் தெரிவித்திருந்தார்.
ஆர்ச்சருக்கு பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றும் மனைவி மேரியும், வில்லியம் ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆர்ச்சர் என்ற 2 மகன்களும் 5 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
ஜெஃப்ரி ஆர்ச்சரின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், அவரது ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Summary
Politics and sex were the ingredients which ensured his success as a novelist. But in real life the combination led to the downfall of the man who once hoped to become mayor of London.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





