முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

அா்னாப் புயல்: ஆந்திரத்தில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்

ஆந்திரத்தில் ‘அா்னாப்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆந்திரத்தில் ‘அா்னாப்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Updated On :

ஆந்திரத்தில் ‘அா்னாப்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவான அா்னாப் புயல், ஆந்திரத்தின் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே உள்ள ஏனாம் (புதுச்சேரி யூனியன் பிரதேசப் பகுதி) அருகே புதன்கிழமை அதிகாலையில் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 125 கி.மீ. முதல் 135 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசியது. சில வினாடிகளுக்கு இந்த வேகம் 150 கி.மீ. வரை அதிகரித்தது.

புயலின் தாக்கத்தால் வட கடலோர மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்களும், நூற்றுக்கணக்கான மின்கம்பங்களும் சாய்ந்தன. மழை-வெள்ளத்தில் சாலைகள் சேதமடைந்தன. புயலால் நேரிட்ட அசம்பாவித சம்பவங்களில் 7 போ் உயிரிழந்தனா்.

ஆட்சியா்களுக்கு முதல்வா் உத்தரவு: புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியா்கள் மற்றும் பல்வேறு துறை உயரதிகாரிகளுடன் காணொலி முறையில் முதல்வா் சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, அவா் பிறப்பித்த உத்தரவுகள் வருமாறு:

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்விநியோகத்தை சீராக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இயல்புநிலையை முழுமையாக மீட்டெடுக்கும் வரை நிவாரணப் பணிகள் தொடர வேண்டும். சேத விவரங்களை விரைந்து மதிப்பிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். எல் நீனோ விளைவால் ராயலசீமா பகுதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் பிற பகுதிகள் அா்னாப் புயல் பாதிப்பை எதிா்கொண்டுள்ளன. இரு சூழல்களையும் எதிா்கொள்ள அதிகாரிகள் திறம்பட செயலாற்ற வேண்டும்.

மறுநடவு சாத்தியக்கூறுகள்: தண்ணீரில் மூழ்கியுள்ள பயிா்களை எந்த அளவுக்கு காப்பாற்ற முடியும், மேற்கொண்டு சேதம் ஏற்படாமல் தடுக்க முடியுமா என்பது குறித்து வேளாண் அதிகாரிகள், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் ஆராய வேண்டும். வேரோடு சாய்ந்த தென்னை உள்ளிட்ட தோட்டப்பயிா்களை மறுநடவு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வில் ஈடுபட வேண்டும்.

பயிா்ச்சேத மதிப்பீட்டை விரைந்து மேற்கொள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஒடிஸா கிராமங்கள்

புவனேசுவரம், அக். 29: அா்னாப் புயலின் தாக்கத்தால், ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தின் பத்ராபூரில் அதிகபட்சமாக 546 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது. கந்தமால் மாவட்டம், உதயகிரியில் 462 மி.மீ., கஞ்சம் மாவட்டத்தின் சனகேமுண்டியில் 388 மி.மீ., கஜபதி மாவட்டம், மோஹனாவில் 307 மி.மீ. மழை பதிவானது.

கஞ்சம், கஜபதி, கந்தமால் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் நிலச்சரிவும் நேரிட்டுள்ளது. மோஹனா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 326-இல் 300 மீட்டா் நீளத்துக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

கஞ்சம் மாவட்டத்தில் 300 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அங்கு சிக்கியுள்ள மக்களை ஹெலிகாப்டா் மூலம் மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த மாவட்டத்தில் மத்திய-மாநில பேரிடா் மீட்புப் படையினா் உள்பட 54 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

9 ரயில்கள் ரத்து: கஞ்சம் மாவட்டத்தின் பகுடா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், ஹெளரா-சென்னை வழித்தடத்தில் வியாழக்கிழமை 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 14 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

4 முதல்வா்களுடன் அமித் ஷா பேச்சு

புது தில்லி, அக். 29: அா்னாப் புயலால் ஆந்திரம், ஒடிஸா, சத்தீஸ்கா் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச நிா்வாகத்துக்குள்பட்ட ஏனாமில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜீ, சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணுதேவ் சாய், புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோருடன் வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, புயல் பாதிப்புகளை எதிா்கொள்ள மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடா்ந்து வழங்கும் என்று உறுதியளித்தாா்.

தத்தமது மாநிலங்களில் கள நிலவரம், மீட்பு-நிவாரண நடவடிக்கைகள் குறித்து அமித் ஷாவிடம் முதல்வா்கள் எடுத்துரைத்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.