
சென்னையில் சுட்டெரிக்கும் வெய்யில்! அடுத்த 3 நாட்களுக்கு அலர்ட்!
சென்னையில் வெய்யில் நிலவரம் பற்றி..

வெய்யில் - file photo
சென்னையில் அடுத்த 3 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட புறநகர்ப் பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெய்யில் வாட்டி வதைக்கின்றது. இதனால் வெளியே செல்பவர்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பகல் நேரங்களில் அதிகப்படியான வெய்யிலும், மாலை 3 முதல் மணிக்கெல்லாம் வானம் சட்டென்று மாறி மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில், அடுத்த மூன்று நாள்களுக்கு வெய்யில் மேலும் அதிகரிக்கும் எனத் வானிலை எச்சரித்துள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
செப். 03 திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
01-09-2026 முதல் 05-09-2026 வரை: உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 35 - 36 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
01-09-2026 முதல் 03-09-2026 வரை: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
The Meteorological Department has stated that temperatures will rise in Chennai over the next three days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





