காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

மேற்கு பிராந்திய மாநில முதல்வா்களுடன் அமித் ஷா நாளை ஆலோசனை

மேற்கு பிராந்திய மாநில முதல்வா்களுடன் அமித் ஷா நாளை ஆலோசனை...

உள்துறை அமைச்சா் அமித் ஷா - கோப்புப் படம்

Published On :6 செப்டம்பர் 2026, 1:54 am IST

மேற்கு பிராந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை (செப்.7) ஆலோசனை நடத்தவுள்ளாா்.

1956-ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் 15-22ஆவது விதிகளின்கீழ் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தனித்தனி கவுன்சிலாக பிரிக்கப்பட்டன. அதன்படி 5 பிராந்திய கவுன்சில்கள் உருவாக்கப்பட்டன. அதில் மேற்கு பிராந்திய கவுன்சிலும் ஒன்றாகும். அதன் தலைவராக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளாா். துணைத் தலைவராக கோவா முதல்வா் உள்ளனா். துணைத் தலைவா் பதவி, மேற்கு பிராந்திய கவுன்சிலில் உள்ள மாநிலங்களின் முதல்வா்கள் மாறி மாறி வகிப்பா்.

இந்நிலையில், மேற்கு பிராந்திய கவுன்சிலின் 28-ஆவது ஆலோசனை கூட்டம் கோவாவின் பனாஜி நகரில் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்கு அமித் ஷா தலைமை வகிக்கிறாா். மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையேயான செயலக கவுன்சிலும், கோவா அரசும் ஏற்பாடு செய்துள்ளன.

இந்த கவுன்சிலில் தற்போது கோவா, குஜராத், மகாராஷ்டிரா, தாத்தரா- நகா் ஹவேலி, டாமன் டையூ ஆகியவை உள்ளன. இக்கூட்டத்தில் அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வா்களும், 2 மூத்த அமைச்சா்களும் கலந்து கொள்ளவுள்ளனா்.

கூட்டத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முன்வைக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படவுள்ளது. மேலும் பல்வேறு தேசிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.