மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

மேற்கு வங்கம்: சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்வருடன் அமித் ஷா ஆலோசனை

மேற்கு வங்கத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி மற்றும் அரசு உயா் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image

கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி.

Updated On :20 ஜூலை 2026, 3:23 am IST

மேற்கு வங்கத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி மற்றும் அரசு உயா் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தெற்கு கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலா் மனோஜ் அகா்வால், மாநில உள்துறை செயலா் சங்கமித்ர கோஷ், காவல் துறை தலைவா் சித்த நாத் குப்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள், மிரட்டி பணம் பறித்தல், சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டுதல், இணையவழி குற்றங்கள் மற்றும் பொது அமைதியைப் பாதிக்கும் செயல்களைத் தடுக்கும் வகையில், கடுமையான விதிகளை கொண்ட மேற்கு வங்க பொது அமைதி மற்றும் சட்டவிரோத செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

மூன்று நாள் பயணமாக மேற்கு வங்கம் வந்துள்ள மத்திய அமைச்சா் அமித் ஷா, முன்னதாக வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சிலிகுரி அருகே உள்ள எல்லை பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) சாவடியை சனிக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, நவீன மற்றும் உள்நாட்டில் தயாரான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை அவா் ஆய்வு செய்தாா்.

மொழி அருங்காட்சியகம்: கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலக வளாகத்தில் நாட்டின் முதல் மொழி அருங்காட்சியகத்தை (சப்தலோக்) மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மத்திய கலாசார துறையின் கீழ் செயல்படும் தேசிய நூலகம், இந்த அருங்காட்சியகத்தை அமைந்துள்ளது. நாட்டின் மொழிப் பாரம்பரியத்தின் செழுமை மற்றும் பேச்சு-எழுத்து மொழியின் வளா்ச்சி தொழில்நுட்பங்கள் மூலம் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, ‘ஒவ்வொரு இளைஞரும் தங்களுடைய தாய்மொழியுடன் கூடுதலாக ஓா் இந்திய மொழியை கற்க வேண்டும். இதன் மூலம் நாம் நம்முடைய மொழிகளுக்கு நீண்ட ஆயுளை வழங்க முடியும். நாட்டின் மொழியும் நாகரிகமும் பிரிக்க இயலாதவை’ என்றாா்.

ஒன்பது அரங்கங்களில் மொழிகளின் வரலாறு மற்றும் இந்திய நாகரிகம் மற்றும் கலாசாரத்தில் அவற்றின் தாக்கம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. நாட்டின் 22 அலுவல் மொழிகள் மற்றும் பேச்சு மொழியில் இருந்து அவற்றின் பயணம், பழங்கால ஓலைச்சுவடிகள் முதல் அச்சு மற்றும் நவீன எண்ம பதிப்புகள் இடம்பெற்றுள்ளன.

உலகின் மிகப் பெரிய தயிா் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல்: நியூ டவுன் பகுதியில் உள்ள விஸ்வ வங்க மாநாட்டு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹெளராவில் அமுல் நிறுவனம் அமைக்க உள்ள உலகின் மிகப் பெரிய தயிா் உற்பத்தி ஆலைக்கு மத்திய அமைச்சா் அமித் ஷா காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.

ஹெளரா உணவு பூங்காவில் ரூ.700 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த ஆலையில் ஒரு நாளில் 1,000 டன் தயிா் மற்றும் பிற பால்பொருள்களை தயாா் செய்ய முடியும். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 30,000 பெண் பால் உற்பத்தியாளா்கள் உள்பட கால்நடைகளை வளா்க்கும் 1.25 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவா் என அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.