பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் விரைவில் அமல்: முதல்வா் சுவேந்து அதிகாரி அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஜூன் 2026, 12:04 am IST

மேற்கு வங்க மாநிலத்தில் பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, தோ்தலில் வென்று ஆட்சியமைத்த 6 மாதங்களுக்குள் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலுக்காக வெளியிடப்பட்ட பாஜக தோ்தல் அறிக்கையிலும், இந்த வாக்குறுதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

இந்நிலையில், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வா் சுவேந்து அதிகாரி, ‘பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த சில சட்ட நடைமுறைகள் உள்ளன. அதைச் செய்தாக வேண்டும். குஜராத், அஸ்ஸாம் மாநிலங்களைப் போல அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றாா்.

குஜராத், அஸ்ஸாம் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும், திருமணம், விவாகரத்து உள்ளிட்டவற்றைக் கையாள்வது தொடா்பான நிா்வாக ரீதியிலான நடவடிக்கைகளும் அந்த மாநிலங்களின் அரசால் எடுக்கப்பட்டன. இதை மனதில் வைத்தே சுவேந்து அதிகாரி இவ்வாறு கூறினாா்.

மூத்த அமைச்சா் ஒருவா் கூறுகையில், ‘உத்தரகண்ட், குஜராத், அஸ்ஸாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்கெனவே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளன. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு நாங்கள் வாக்குறுதி அளித்தபடி, மேற்கு வங்கத்திலும் அந்தச் சட்டத்தை அமல்படுத்துவோம்’ என்றாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் தற்போது நடைபெறுகிறது. இக்கூட்டத் தொடரில் வருகிற திங்கள்கிழமை பொது சிவில் சட்டம் தொடா்பான மசோதாவை பாஜக அரசு அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.