பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

மாணவர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ராகுல் காந்தி

மகாராஷ்டிரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் குரல்களுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளது குறித்து...

Rahul Gandhi with students.

மாணவர்களுடன் ராகுல் காந்தி. - படம் - எக்ஸ்

Published On :6 செப்டம்பர் 2026, 11:48 am IST

மகாராஷ்டிரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் குரல்களுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை (செப். 6) தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில், பழங்குடியின மாணவர்களுக்கான அரசு விடுதிகளில் ஏற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து நாசிக் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவ அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு ராகுல் காந்தி வியாழக்கிழமை (செப். 3) நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இருப்பினும், மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மகாராஷ்டிரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இதற்குக் காரணம் தேர்வில் அல்லது ஆள் சேர்ப்பில் நடைபெற்ற முறைகேடுகளோ அல்ல; மாறாக, கல்வி அமைப்பின் மீது இருந்த ஒட்டுமொத்த நம்பிக்கையும் சிதைந்ததே.

மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி பாஜக ஆட்சியில் மாணவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். வினாத்தாள் கசிவுகள், நிறுத்தப்பட்ட ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள், தாங்க முடியாத கல்விச் செலவு, விடுதிகளில் மனிதாபிமானமற்ற நிலைமைகள், விஷம் போன்ற உணவு, நேரடிப் பணப் பரிமாற்றத்தில் மோசடி போன்ற செயல்களின் மூலம் அதன் நம்பகத்தன்மையை அழித்துவிட்டனர்.

மாணவர்களின் வெற்றிகரமான எதிர்காலத்துக்கான ஒவ்வொரு கோரிக்கையும் நியாயமானதே. அரசு அவர்களின் குரலுக்குச் செவிசாய்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நீதி கிடைக்கும் வரை மாணவர்களின் இந்தக் குரல் மேலும் வலுவடையும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Summary

Congress leader and Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi stated on Sunday (Sept. 6) that the government must heed the voices of students protesting in Maharashtra.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.