சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கக் கூடிய ஆராய்ச்சிகள்: மாணவர்களிடம் குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

சமூகத்தின் பிரச்னைகளுக்கு தீர்வளிக்கக் கூடிய ஆராய்ச்சியை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நினைவுப் பரிசு அளித்த ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, உடன் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா.

Published On :24 வினாடிகள் முன்பு

சமூகத்தின் பிரச்னைகளுக்கு தீர்வளிக்கக் கூடிய ஆராய்ச்சியை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

அஸ்ஸாமில் அவர் இரு நாள்களுக்கு பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின் நிறைவு நாளான திங்கள்கிழமை, குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் ரூ.110 கோடி மதிப்பிலான உள் கட்டமைப்பு திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டிப் பேசிய தாவது:

சமூகத்தின் பிரச்னைகளுக்கு தீர்வளிக்கக் கூடிய ஆராய்ச்சியை மாணவர்கள் மேற்கொள்ளவேண்டும். அவர்கள் மனித சமூகத்துக்கு சேவையாற்றுவதுடன் அனைவ ரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு புதுமை வழிகாட்ட அனுமதிக்க வேண்டும்.

ஒரு பல்கலைக்கழகத்தின் மதிப்பு என்பது மனிதர்களின் வாழ்க்கையை அது மாற்றுவதிலும் சமூ கத்துக்கு அது ஆற்றும் பங்களிப்பி லும் அடங்கியுள்ளது. பல்கலைக் கழகங்கள் வெறுமனே வகுப்பறைகள் அல்ல; அவை மேன்மை, புதுமை படைத்தல், சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மையங்களாகும்.

பல்கலைக்கழகங்களில் தங்கப் பதக்கம் பெறுவோரில் அதிகமானோர் பெண்களாவர். இதுவரவேற்கத்தக்க அம்சமாகும்.

தற்போது ஒரு மௌனப் புரட்சி நடை பெற்று வருகிறது. இது வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நீண்ட பயணத்தை மேற்கொள்ளும். தொழில்நுட்பம் வேகமாக மாறிவரும் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் மொழிசார்ந்த வேற்றுமையை செழுமைப்படுத்துவது ஒரு தேசியப் பொறுப்பாகும்.

அஸ்ஸாமி மொழியை செம்மொழியாக அறிவிப்பதற்கு முன் முயற்சி எடுத்த பிரதமர் நரேந்திர மோடியையும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவையும் பாராட்டுகிறேன்.

முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவின் தலைமையில் அஸ்ஸாம் மாற்றத்துக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு, தொடர்புகள், சமூக பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் அஸ்ஸாம் சிறப்பு பெற்றுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக அஸ்ஸாம் உருவெடுத்துள்ளது.

புதிய தொழில் நிறுவனங்களையும் முதலீடுகளையும் ஈர்ப்பது, பொது கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவை ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நுழைவு வாயிலாக அஸ்ஸாமை முன்னிறுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளன.

குவாஹாட்டி பல்கலைக்கழகத்தின் அறிவுசார் கட்டமைப்பு, 3 லட்சம் புத்தகங்கள், ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை அடங்கிய அதன் கிருஷ்ண காந்தா நூலகம் ஆகியவற்றைப் பாராட்டுகிறேன்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்றுத் தரப்படுகிறது என்பதை அறிந்து வியந்தேன். தமிழ் இலக்கியத்துக்கு சொந்தமான பல்வேறு நூல்கள் இங்கு அஸ்ஸாமி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அதே போன்று அஸ்ஸாமி மொழி நூல் கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இமயமலை சார்ந்த ஆராய்ச்சிகள், பிரம்மபுத்ரா படுகையில் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சவால்கள், மகளிர் குறித்த ஆய் வுகள், அபாய கட்டத்தில் உள்ள மொழிகள், உள்நாட்டு அறிவுசார் கட்டமைப்பு போன்ற சமகால விஷயங்களில் குவாஹாட்டி பல்கலைக்கழகம் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் அஸ்ஸாம் ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, சுல்வி அமைச்சர் ரனோஜ் பெகு குவாஹாட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் நானிகோபால் மஹந்தா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.