நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

பல வாரங்களாக பெய்யாத மழை! மகாராஷ்டிரத்தில் வறட்சி பாதிப்பு அபாயம்!

மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளில் வறட்சி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சித்திரிப்பு

Published On :

மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளில் வறட்சி பாதிப்பு அபாயம் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரத்தில் பல நகரங்களில் தொடர்ச்சியாக 40 நாள்கள் வரை மழை பெய்யாததால் வறட்சி சூழ்நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள 11 மாவட்டங்களில் கடந்த 30 நாள்களாகவும், 4 மாவட்டங்களில் 34 நாள்களாகவும், 4 மாவட்டங்களில் 37 நாள்களாகவும், 2 மாவட்டங்களில் 40 நாள்களாகவும் மழை பெய்யவில்லை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழைக்குப் பின் அங்கு குறிப்பிடத்தகுந்த அளவில் மழை எங்கும் பெய்யவில்லை. இதனால், அறுவடைக்குத் தயாராக உள்ள காரீஃப் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதனால் புனே, அகில்யா நகர், புல்டானா, நாசிக், சாங்லி, சதாரா போன்ற மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. அதேபோல பீட், சத்ரபதி சம்பாஜி நகர், தாராசிவ் மற்றும் சோலாப்பூர் போன்ற பகுதிகளும் வறட்சியால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழை பெய்யாததால் பருத்தி, சோயாபீன், சோளம் மற்றும் பருப்பு வகைகள் வறண்டு வரும் நிலையில், அரசு வறட்சி அறிவிப்பு செய்து நிவாரண உதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எல் நினோ காரணமாக பருவமழை பாதிக்கப்பட்டதே வறட்சிக்கு காரணம் என விவசாயிகள் சங்கத் தலைவர் விஜய் ஜவாந்தியா தெரிவித்துள்ளார். வளர்ச்சி நிலையின் முக்கிய கட்டத்தில் இருக்கும் பயிர்களால் இதுபோன்ற வறட்சியைத் தாங்க முடியாது எனக் கூறிய அவர், மானாவாரிப் பயிர்கள் முழுவதும் சேதமடைந்து முதலீட்டைக் கூட பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதிக வட்டிக்குக் கடன் வாங்கி விதைகள் மற்றும் உரங்களை வாங்கிய விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், மழைக்காகக் காத்திருப்பதை விடுத்து, மாநில அரசு சார்பில் விவசாயிகளுக்கு உதவும் விதமாக அவசரகால திட்டங்களைத் தொடங்கி இழப்பைக் குறைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Summary

Reports indicate a risk of drought affecting several parts of Maharashtra.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.