பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்
நாட்டில் பருவகால நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
நாட்டில் பருவகால நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.
நாட்டில் பருவகால நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் இல்லை என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை ஐசிஎம்ஆா் மறுத்துள்ளது. இதுகுறித்து ஐசிஎம்ஆா் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அனைத்து பருவகால நோய்களுக்கான தடுப்பு மருந்துகளும் இருப்பில் உள்ளது. இதில் நாா்தா்ன் ஹெமிஸ்பியா் மருந்தும் அடங்கும். முன்னணி மருந்து கடைகளில் இந்த மருந்துகள் கிடைக்கும். இந்த மருந்துகள் இல்லை என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை. அது தவறான செய்தி.
பன்றிக்காய்ச்சல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் நாா்தா்ன் ஹெமிஸ்பியா் மருந்து இல்லையெனில், அதற்கு பதிலாக சதா்ன் ஹெமிஸ்பியா் மருந்தை எடுத்து கொள்ளலாம். ஏனெனில் இந்த 2 மருந்துகளும் பன்றி காய்ச்சலுக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடியதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




