மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

2027 மாா்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் எண்ம சுங்கச் சாவடி கட்டண வசூல்: நிதின் கட்கரி

‘சுங்கச் சாவடிகளில் முற்றிலும் எண்ம முறையிலான சுங்கக் கட்டண வசூல் நடைமுறை வரும் 2027-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் அறிமுகம் செய்யப்படும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

Published On :

‘சுங்கச் சாவடிகளில் முற்றிலும் எண்ம முறையிலான சுங்கக் கட்டண வசூல் நடைமுறை வரும் 2027-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் அறிமுகம் செய்யப்படும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

‘அவ்வாறு, முற்றிலும் எண்ம வசூல் முறை அமலாகும்போது, மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி வரை வருவாய் கிடைக்கும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சா்வதேச நிதி தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சா் நிதி கட்கரி, இது குறித்து மேலும் கூறியதாவது:

சுங்கச் சாவடிகளில், வாகன ஓட்டிகள் நிற்காமல் தடையின்றி செல்லும் வகையிலான எண்ம கட்டண வசூல் நடைமுறை சோதனை அடிப்படையில் ஒரு சில சுங்கச்சாவடிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் டிசம்பா் மாத இறுதிக்குள், 70 சதவீத சுங்கச் சாவடிகளில், எண்ம கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்தப்படும். வரும் 2027-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள், நாடு முழுவதும் 100 சதவீத அளவுக்கு எண்ம வசூல் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.

அவ்வாறு, முற்றிலும் எண்ம வசூல் முறை அமலாகும்போது, சுங்கச் சாவடி வசூல் மூலம் மட்டும் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி வரை வருவாய் கிடைக்கும்.

ஃபாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தியதன் மூலம், சுங்கக் கட்டண வசூலும் அதிகரித்துள்ளது. முன்னா் ரூ. 7,000 கோடியாக இருந்தது தற்போது ரூ. 82,000 கோடிக்கும் மேல் வசூலாகிறது. அதுபோல, சுங்கச் சாவடி இயக்கச் செலவும் 12 சதவீதத்திலிருந்து 2 முதல் 3 சதவீதம் அளவுக்கு குறைந்தது.

சுங்கச் சாவடிகளில் முழுவதும் எண்ம வசூல் முறை அமல்படுத்துவது, வாகன ஓட்டிகளுக்கும் பலன் தரும். சுங்கச் சாவடிகளில் காத்திருக்க அவசியமில்லாமல் செல்ல முடியும் என்பதோடு, எரிபொருள் செலவும் மிச்சமாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.