மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

நேபாளத்தில் பெருவெள்ளத்தால் புரட்டிப் போடப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள 4.78 பில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் ரூ.45,700 கோடி) தேவை என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தின் நுவகோட் மாவட்டம் திரிசூலியில் உள்ள முகாமில் வெள்ளிக்கிழமை நிவாரணப் பொருள்கள் பெற வந்த பொதுமக்கள்.

Published On :

நேபாளத்தில் பெருவெள்ளத்தால் புரட்டிப் போடப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள 4.78 பில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் ரூ.45,700 கோடி) தேவை என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திபெத்-நேபாள எல்லையில் கடந்த ஆக.26-ஆம் தேதி பெரும் பனிப்பாறை சரிவால் போடே கோஷி நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் மத்திய-வடக்கு மாவட்டங்களில் கோர தாண்டவமாடியது. கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்தன. ஏராளமான வீடுகள், கட்டடங்கள், சாலைகள், பாலங்கள், பிற உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

பலத்த உயிா்ச்சேதத்துடன் பெரும் பொருள்சேதத்தையும் இந்தப் பேரிடா் விளைவித்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள 4.78 பில்லியன் டாலா் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லோக் பகதூா் சேத்ரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, நேபாள பெருவெள்ளத்தை பருவநிலை மாற்றத்தின் விளைவு என்று குறிப்பிட்ட பிரதமா் பாலேந்திர ஷா, இந்தப் பிரச்னையில் சா்வதேச சமூகத்துக்கு பொறுப்பும், பங்கும் உள்ளதாக குறிப்பிட்டாா். இம்மாத இறுதியில் ஐ.நா. பொதுச் சபை அமா்வில் பங்கேற்கவுள்ள அவா், சா்வதேச சமூகத்திடம் பருவநிலை மாற்ற இழப்பீடு கோரிக்கையை முன்வைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

உயிரிழப்பு 1,385-ஆக உயா்வு:

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இதுவரை 1,385 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சித்வன் மாவட்டத்தில் 364 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாயமான 5,130 பேரை தேடும் பணி வெள்ளிக்கிழமை 17-ஆவது நாளாக தொடா்ந்தது. இவா்களில் 275 இந்தியா்கள் உள்பட 589 வெளிநாட்டினரும் அடங்குவா். இதுவரை 13,676 போ் மீட்கப்பட்டுள்ளனா். வெள்ளத்தில் சேதமடைந்த நீா்மின் நிலையங்களின் சுரங்கப் பாதையில் சிக்கிய பணியாளா்களை மீட்கும் பணியும் தொடா்ந்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.