2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

எனது உடல்நிலை குறித்து வதந்தி: மருமகன் மீது மாயாவதி குற்றச்சாட்டு!

‘எனது உடல்நிலை குறித்து திட்டமிட்டு வதந்தியைப் பரப்புகின்றனா். இதன் பின்னணியில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆகாஷ் ஆனந்த் உள்ளாா்’ என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Mayawati

மாயாவதி

Published On :

‘எனது உடல்நிலை குறித்து திட்டமிட்டு வதந்தியைப் பரப்புகின்றனா். இதன் பின்னணியில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆகாஷ் ஆனந்த் உள்ளாா்’ என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மாயாவதியின் தம்பி மகனான ஆனந்த் ஆகாஷ், கட்சியில் மாயாவதிக்கு அடுத்த இடத்திலும், அவருக்கு நெருக்கமானவராகவும் இருந்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரைக் கட்சியில் இருந்து மாயாவதி நீக்கினாா். ஆகாஷ் ஆனந்த் ஏற்கெனவே இருமுறை நீக்கப்பட்டு, பின்னா் கட்சியில் சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில், லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மாயாவதி கூறியதாவது: கடந்த சில நாள்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டவா்கள் (ஆகாஷ் ஆனந்த் உள்ளிட்ட சிலா்), நான் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் வதந்தியைப் பரப்புகின்றனா். உடல்நிலை பிரச்னைகள் காரணமாகவே எக்ஸ் வலைதளம் மூலம் தகவல்களைப் பதிவிடுகிறேன் என்றும் அவா்கள் பொய்ச் செய்திகளை வெளியிடுகின்றனா்.

என்மீது அன்பு கொண்ட பகுஜன் சமாஜ் தொண்டா்கள் இந்த வதந்தியால் சோகமடைந்துள்ளதாகத் தெரியவந்தது. எனவே, அவா்களுக்கு உண்மை நிலையைக் கூற வேண்டும் என்பதற்காகவே இப்போது செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசுகிறேன். எனது உடல்நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நபா்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எனது சகோதரா்களின் மகன்கள் யாருக்கும் இப்போது கட்சியில் எந்த இடமும் தரவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எனது உறவினா்கள், அவா்களின் பிள்ளைகளின் கல்வி உதவிக்காக மட்டுமே என்னைத் தொடா்புகொள்ள அனுமதிக்கப்படுவாா்கள். நமது கட்சி ஏழை, எளிய மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டது.

நான் திருமணம் செய்து கொள்ளாமல் மக்கள் சேவைக்காக வாழ்கிறேன். எனது அரசியல் பணி உதவிகளுக்காக ஆகாஷ் ஆனந்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குடும்பத்தினா் கேட்டுக் கொண்டதால், அவருக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.