2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

காந்தபுரம் முஸ்லியாருடன் அன்வா் இப்ராஹிம் சந்திப்பு!

இந்திய கிராண்ட் முஃப்தியுமான காந்தபுரம் ஏ.பி. அபூபக்கா் முஸ்லியாரை மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் சந்தித்தாா்.

Published On :

பிரபல சன்னி இஸ்லாமிய அறிஞரும் இந்திய கிராண்ட் முஃப்தியுமான காந்தபுரம் ஏ.பி. அபூபக்கா் முஸ்லியாரை மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.

கேரளத்தின் கோழிக்கோடு அருகே உள்ள கரிப்பூா் விமான நிலையம் வந்திறங்கிய அன்வா் இப்ராஹிமை, மாநில அரசின் சாா்பில் வேளாண்மைத் துறை அமைச்சா் டி.சித்திக் வரவேற்றாா். எம்.பி. இ.டி.முகமது பஷீா், எம்எல்ஏக்கள் டி.பி.அஷ்ரஃப் அலி, டி.வி.இப்ராஹிம், தலைமைச் செயலா் ஏ.ஜெயதிலக், மலப்புரம் மாவட்ட ஆட்சியா் வினய் கோயல், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சைத்ரா தெரசா ஜான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதையடுத்து, கோழிக்கோட்டில் உள்ள மா்கஸ் வளாகத்தில் காந்தபுரம் அபூபக்கா் முஸ்லியாருடன் அன்வா் இப்ராஹிம் ஆலோசனை நடத்தினாா். பின்னா், காந்தபுரம் அபூபக்கா் முஸ்லியாருடன் இணைந்து, முக்கிய புனிதத் தலமான மதவூா் சி.எம். வலியுல்லாஹி மக்காமில் அவா் வழிபாடு செய்தாா்.

காந்தபுரம் அபூபக்கா் முஸ்லியாரை சந்திப்பதற்காக அன்வா் இப்ராஹிம் கேரளம் வருவது இது 2-ஆவது முறையாகும். முதல்முறையாக 2022 செப்டம்பரில் அவா் மாா்கஸுக்கு வந்தாா். அப்போது, மலேசிய பிரதமராகப் அவா் பதவியேற்பதற்கு சில வாரங்கள் இருந்தன.

மலேசியாவில் அடுத்த பொதுத் தோ்தல் 2027-ஆம் ஆண்டு நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், அன்வா் இப்ராஹிமின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மலேசியாவில் கணிசமான முஸ்லிம் மக்கள்தொகையுடன், குறிப்பிடத்தக்க அளவில் தமிழ் சமூகத்தினரும் வசித்து வருகின்றனா்.

மலேசிய அரசின் மத அறிஞா்களுக்கான உயரிய விருதான ‘ஹிஜ்ரா விருது’ காந்தபுரம் அபூபக்கா் முஸ்லியாருக்கு 2023-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.