பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதி சயீத்துக்கு எதிராக என்ஐஏ அழைப்பாணை

பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டதாக சயீத் இப்ராகிமுக்கு என்ஐஏ அழைப்பாணை விடுத்தது குறித்து...

NIA summons Sayeed Ibrahim for allegedly masterminding the Pahalgam terror attack case

பயங்கரவாதி சயீத்துக்கு எதிராக என்ஐஏ அழைப்பாணை - பிரதிப் படம்

Published On :23 ஆகஸ்ட் 2026, 8:25 am IST

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டதாக பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத்துக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை அழைப்பாணை விடுத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 2025 ஏப்ரல் 22 ஆம் தேதியில் பாகிஸ்தான் பயஙகரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ -தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, தி ரெசிஸ்டென்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது. இதனிடையே, இந்திய ராணுவம், ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக டிச. 15-ல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, அதில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றன. மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத் மீது என்ஐஏ குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் தஞ்சமாகியிருக்கும் ஹஃபீஸ் சயீத்துக்கு எதிராக இந்திய வெளியுறவு அமைச்சகம் அழைப்பாணை விடுத்துள்ளது. ஜம்முவில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் விசாரணைக்காக சயீத் ஆஜராக வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் அழைப்பாணை விடுத்துள்ளது.

Summary

NIA summons Sayeed Ibrahim for allegedly masterminding the Pahalgam terror attack case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.