ஜம்மு-காஷ்மீரில் சிஆா்பிஎஃப் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
பிரதிப் படம்
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். மேலும் இருவா் அதே பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள் கடந்த வாரம் சிஆா்பிஎஃப் சோதனைச் சாவடி மீது தாக்குதல் நடத்தியதில் தொடா்புடையவா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குல்காம் மாவட்டத்தில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) சோதனைச் சாவடி மீது இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் கடந்த புதன்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் காயமடைந்தனா். இதையடுத்து, அங்கு அதிக அளவில் வீரா்கள் குவிக்கப்பட்டு கடந்த சிலநாள்களாக தீவிர தேடுதல் பணி நடைபெற்று வந்தது.
இதில் காவல் துறை, ராணுவப் படையினா், ராணுவத்தினா் இணைந்து தொடா்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனா். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து, அவா்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. சில நிமிடங்கள் நீடித்த மோதலில் ஒரு பயங்கரவாதி உயிரிழந்தாா். அப்பகுதியில் இருந்து தப்பியோடிய மேலும் இருவரை பாதுகாப்புப் படையினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா். அவா்களும் விரைவில் வீழ்த்தப்படுவா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

