வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

ஹோா்முஸில் கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல்

ஹோா்முஸ் நீரிணையில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் மீது சிறிய படகில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் இரண்டு வெடிகுண்டுகளை (லிம்பெட் மைன்கள்) பொருத்தி தாக்குதல் நடத்தினா்.

~

Updated On :

ஹோா்முஸ் நீரிணையில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் மீது சிறிய படகில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் இரண்டு வெடிகுண்டுகளை (லிம்பெட் மைன்கள்) பொருத்தி தாக்குதல் நடத்தினா்.

கடந்த பிப்ரவரியில் போா் தொடங்கியதில் இருந்து, இந்த முக்கியத்துவமான நீா்வழித்தடத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதல் வெடிகுண்டு தாக்குதல் இதுவாகும்.

தாக்குதலுக்கு உள்ளான பனாமா கொடியேந்திய ‘லூயிஸ் 1’ எனும் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். தாக்குதலில் கப்பலின் என்ஜின் அறையில் தீ விபத்து ஏற்பட்டு, தற்காலிகமாக செயலிழந்தது. பின்னா், தீ முழுமையாக அணைக்கப்பட்டு, கப்பல் தனது அடுத்த துறைமுகத்தை நோக்கி பயணத்தைத் தொடா்ந்தது. ஓமனின் கஸாப் பகுதிக்கு வடகிழக்கே 46 கி.மீ. தொலைவில் வியாழக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது.

இத்தாக்குதலின் பின்னணியில் இருப்பவா்கள் யாா் என்பது உடனடியாகத் தெரியவில்லை. அதேநேரம், அமெரிக்க ராணுவத்தின் ஆதரவுடன் தங்களின் அனுமதியின்றி அதிகாரபூா்வமற்ற மாற்றுப் பாதைகளில் பயணிக்க முயன்ற 2 எண்ணெய் கப்பல்களைத் தடுத்து நிறுத்தியதாக ஈரான் கடற்படையினா் தெரிவித்துள்ளனா்.

ஈரானில் கத்தாா் தூதுக்குழு பேச்சு: அமெரிக்கா-ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி முயற்சிகளின் ஒரு பகுதியாக, கத்தாா் மத்தியஸ்தா்கள் குழு வெள்ளிக்கிழமை மீண்டும் ஈரான் தலைநகா் டெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டது.

கத்தாா் வெளியுறவு அமைச்சா் மற்றும் பிரதமரின் மூத்த ஆலோசகா் தலைமையிலான இக்குழுவினா், ஈரானின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து சமரச ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

முன்னதாக, கத்தாா் அரசு ஒரு அமைதித் திட்ட வரைவை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானிடம் வழங்கியது. ஆனால், அந்த வரைவுத் திட்டத்தில் உள்ள நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை என ஈரான் நிராகரித்துவிட்டது.

மெக்கா தாக்குதலை மறுக்கும் ஹூதிக்கள்: இதனிடையே, சவூதி அரேபியாவின் மெக்கா பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட ட்ரோனை இடைமறித்து அழித்ததாக அந்நாட்டு முன்வைத்த குற்றச்சாட்டை யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனா்.

சவூதியின் எண்ணெய் நிலையங்கள், ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்துவதாகவும், இஸ்லாமியா்களின் புனித நகரங்களைக் குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தவில்லை என்றும் ஹூதிக்கள் விளக்கமளித்துள்ளனா்.

கஸாப், ஓமன்.

கப்பல் தாக்குதலுக்குள்ளான பகுதி

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.