தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

பிரிக்ஸ் உச்சி மாநாடு: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!

பிரிக்ஸ் உச்சி மாநாடு தில்லியில் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து...

The entrance to the BRICS summit venue.

பிரிக்ஸ் உச்சி மாநாடு அரங்கின் நுழைவு வாயில். - கோப்புப் படம்

Published On :

பிரிக்ஸ் உச்சி மாநாடு தில்லியில் நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் அமலில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்று வழிப்பாதைகளை காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (செப். 13) அறிவித்துள்ளது.

உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு தலைநகர் தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது.

இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிலையில், 140 அம்சங்களைக் கொண்ட 45 பக்க பிரகடன ஆவணம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அனைத்து நாடுகளின் ஆதரவோடு பிரிக்ஸ் பிரகடனம் ஒருமனதாக ஏற்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

உலகத் தலைவர்கள் தில்லியில் ஒன்றுகூடி இருப்பதால், அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பாரத் மண்டபத்தை சுற்றியுள்ள சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும் தில்லி காவல்துறை அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் சாலைகளில் ஒருவேளை அவசர சிகிச்சைக்காகவோ அல்லது அவசர ஊர்திகளோ வந்தால், அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாதை உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், தில்லி முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும், பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

With the BRICS summit underway in Delhi, the police announced traffic restrictions and alternative routes across the state on Sunday (Sept. 13).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.