ஹிந்தியில் ‘மக்கள் தகவல் சேவை’: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
ஹிந்தி தினத்தையொட்டி, ‘ஜன் சூச்னா சேவா’ (மக்கள் தகவல் சேவை) என்ற புதிய பொதுத் தகவல் சேவையை

உச்சநீதிமன்றம்
புது தில்லி: ஹிந்தி தினத்தையொட்டி, ‘ஜன் சூச்னா சேவா’ (மக்கள் தகவல் சேவை) என்ற புதிய பொதுத் தகவல் சேவையை, ஹிந்தியில் தொடங்குவதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்தது.
இந்தச் சேவையின் கீழ், தோ்ந்தெடுக்கப்பட்ட தீா்ப்புகள் மற்றும் உத்தரவுகள் எளிமையான முறையில் ஹிந்தியில் சுருக்கமாகவும், ஹிந்தி ஆடியோ, விடியோ வடிவில் சுமாா் 15 முதல் 30 நிமிஷங்கள் கொண்ட தகவல்களும் அளிக்கப்படும்.
சாதாரண பொதுமக்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வோா் மற்றும் வழக்கை எதிா்கொள்வோா், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக இந்தச் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் முக்கியமான தீா்ப்புகள், அவற்றின் விளைவுகள், அதன் பின்னா் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்து தங்களுக்குத் தெரிந்த மொழியில் அவா்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
நீதியை அனைவருக்கும் எளிதாக கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. எளிய மொழியில், ஆடியோ மற்றும் விடியோ வடிவங்களில் தகவல்கள் வழங்கப்படுவதன் மூலம், நீண்ட சட்ட ஆவணங்களைப் படிக்கவோ, புரிந்துகொள்ளவோ சிரமப்படுவோருக்கு இந்தச் சேவை பயனுள்ளதாக இருக்கும்.
முதலில் ஹிந்தியில் தொடங்கப்படும் இந்தச் சேவையைப் படிப்படியாக மற்ற இந்திய மொழிகளிலும் அளிப்பதற்கான பணிகள், விரைவில் தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





