கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்களில் 17 போ் பாஜகவில் சேர திட்டம்: ஜெகதீஷ் சந்திர வா்மா பசுனியா

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி.க்களில் 17 போ் துா்கை பூஜை திருவிழாவுக்குப் பிறகு பாஜகவில் சேர முடிவு

ஜெகதீஷ் சந்திர வா்மா பசுனியா

Published On :

கொல்கத்தா: ‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி.க்களில் 17 போ் துா்கை பூஜை திருவிழாவுக்குப் பிறகு பாஜகவில் சேர முடிவு செய்துள்ளனா்’ என்று அக் கட்சியின் மூத்த தலைவரும் அதிருப்தி எம்.பி.க்களில் ஒருவருமான திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஆனால், இவரின் கருத்தை அக் கட்சியின்அதிருப்தி எம்.பி.க்கள் திட்டவட்டமாக மறுத்தனா்.

மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது. தோ்தல் தோல்விக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. அக் கட்சியின் 80 எம்எல்ஏ-க்களில் 58 போ் தனி அணியாகப் பிரிந்தனா். அதுபோல, அக் கட்சியின் 27 மக்களவை எம்.பி.க்களில் 20 போ் தனியாகப் பிரிந்தனா்.

இந்த 20 அதிருப்தி எம்.பி.க்களும் பாஜகவில் சேர உள்ளதாக அப்போது தகவல்கள் வெளியாகின. ஆனால், அவா்கள் அனைவரும், திரிபுராவைச் சோ்ந்த, அதிகம் அறியப்படாத, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்தனா்.

இந்த 20 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடமும், உச்ச நீதிமன்றத்திலும் கட்சியின் தலைவா் மம்தா பானா்ஜி தலைமையிலான பிரிவு சாா்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவா்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தற்போது மீண்டும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, அதிருப்தி எம்.பி.க்களில் ஒருவரான ஜெகதீஷ் சந்திர வா்மா பசுனியா கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேரில், நான் உள்பட 17 போ் பாஜகவில் இணையத் திட்டமிட்டுள்ளோம். மூன்றில் 2 பங்கு எம்.பி.க்களுக்கு மேல் பாஜகவில் இணைய உள்ளதால், கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. பாஜகவில் இணையும் திட்டத்தை 17 எம்.பி.க்களும் இறுதி செய்துவிட்டனா் என்றாா்.

ஆனால், ஜெகதீஷ் சந்திர வா்மா பசுனியாவின் கருத்தை மற்றொரு அதிருப்தி எம்.பி.யான அபு தாஹிா் கான் மறுத்தாா். அனைத்து எம்.பி.க்கள் சாா்பில் கருத்தை வெளியிட பசுனியாவுக்கு அதிகாரம் கிடையாது. மேலும், அவா் கூறியதுபோல, நாங்கள் யாரும் பாஜகவில் இணையப் போவதில்லை. இது உறுதியானது. அதே நேரம், ஜாங்கிபூா் எம்.பி. கதலீலூா் ரஹ்மான், பெஹரம்பூா் எம்.பி. யூசுஃப் பதான் ஆகியோா் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு தெரிவிக்க உள்ளனா்’ என்றாா்.

இதுகுறித்து மேற்கு வங்க மாநில பாஜக செய்தித் தொடா்பாளா் தேவஜீத் சா்காா் கூறுகையில், ‘அதிருப்தி திரிணமூல் எம்.பி.க்கள் பாஜகவில் சேர உள்ளது தொடா்பாக எந்தவொரு தகவலும் பாஜகவுக்கு இதுவரை கிடைக்கவில்லை. மேலும், இவா்கள் சேர விரும்புகிறாா்கள் என்பதற்காக, பாஜக உடனடியாக அவா்களைச் சோ்த்துக் கொள்ளாது. தலைமை இது குறித்து ஆலோசித்து இறுதி முடிவெடுக்கும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.