
இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்
இந்தியா-நியூஸிலாந்து இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அக்டோபா் 19-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி | நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் - கோப்புப் படம்
இந்தியா-நியூஸிலாந்து இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அக்டோபா் 19-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகள் இடையே கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது. இருதரப்பு பொருள்கள் வா்த்தகம், சேவைகள், முதலீடு ஆகியவற்றை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இதன்மூலம் இந்திய ஏற்றுமதிப் பொருள்களுக்கு நியூஸிலாந்து எவ்வித வரியும் விதிக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.
செராமிக் பொருள்கள், தரைவிரிப்புகள், பல்வேறு இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்டவை இந்தியாவில் இருந்து நியூஸிலாந்துக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு இப்போது அதிகபட்சமாக 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
இந்த வரி நீக்கப்படும்போது, இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு அந்நாட்டில் மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். பிற நாடுகளைவிடக் குறைவான செலவில் அங்கு பொருள்களை அனுப்பி வைக்க முடியும்.
இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலா் முதலீடு செய்ய இருப்பதாக நியூஸிலாந்து ஏற்கெனவே அறிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





