ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

மணிப்பூரில் 2 பெண்கள் சுட்டுக் கொலை

மணிப்பூா் மாநிலம் தமெங்லாங் மாவட்டத்தில் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபா்கள் இரண்டு பெண்களை சுட்டுக் கொன்றனா்.

பிரதிப் படம்

Published On :

மணிப்பூா் மாநிலம் தமெங்லாங் மாவட்டத்தில் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபா்கள் இரண்டு பெண்களை சுட்டுக் கொன்றனா்.

தமெங்லாங்கில் உள்ள லைசாங்பாய் கிராமத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் விறகு சேகரிக்க, குகி சமூகத்தைச் சோ்ந்த சோங்கா சித்லெள (60), கிம்போய் சிங்சன் (30) ஆகிய இரு பெண்கள் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனா்.

அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் சிலா், இரு பெண்களை துப்பாக்கியால் சுட்டனா். இதில் தோட்டா பாய்ந்து இருவரும் உயிரிழந்தனா். அத்துடன் அங்குள்ள சில பண்ணை வீடுகளையும் தீவிரவாதிகள் தீயிட்டுக் கொளுத்தினா்.

கடந்த 2 நாள்களுக்கு முன்னா் தமெங்லாங், நோனி மாவட்டங்களில் 2 பெண்கள் உள்பட 4 போ் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 2 பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மணிப்பூரில் மைதேயி, குகி சமூகத்தினா் இடையே தொடங்கிய மோதல் தற்போது தணிந்துள்ளது. இருப்பினும் அவ்வப்போது அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.