கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் விதிகளில் திருத்தம்

மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் விதிகளில் திருத்தம்...

President Droupadi Murmu

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - PTI

Published On :

சட்டப்பேரவையைக் கொண்ட தில்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீா் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்படும் சமயத்தில் நடைபெறும் மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டத்தில் அந்தந்த யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்கள் பங்கேற்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடா்பான திருத்தங்களை மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் ஆணை, 1990-இல் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு மேற்கொண்டதை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த செப்.9-ஆம் தேதி அறிவித்தது. இதற்கான அறிவிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சகம் வெளியிட்டது.

அதில், ‘மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் ஆணை, 1990-ஐ மாற்றியமைத்து புதிய அம்சங்கள் சோ்க்கப்படுகின்றன. அதன்படி சட்டப்பேரவையைக் கொண்ட தில்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீா் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்படும் சமயத்தில் நடைபெறும் மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டத்தில் அந்தந்த யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 239 ஏபி ஆணையின்கீழ் தில்லி, யூனியன் பிரதேசங்கள் சட்டம், 1963, பிரிவு 51-இன்கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம், 2019 பிரிவு 73 ஆகியவற்றின்கீழ் குடியரசுத் தலைவா் ஆட்சியின்போது துணைநிலை ஆளுநா்களுக்கு இதற்கான அழைப்பு விடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலின் தலைவராக பிரதமரும் உறுப்பினா்களாக அனைத்து மாநில முதல்வா்களும், கேபினட் அமைச்சா் அந்தஸ்தைக் கொண்ட 6 அமைச்சா்களும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளும் இருப்பா். அரசமைப்புச் சட்டப்பிரிவு 356-இன்கீழ் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது.

Summary

Amendment to the Inter-State Council Rules

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER