விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

வீடுகளுக்கு 3 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள்: முதல்வா் ரேகா குப்தா

தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வா் ரேகா குப்தா அளித்த பேட்டியில்.....

தில்லி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த முதல்வா் ரேகா குப்தா. உடன் மின்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட்.

Published On :2 செப்டம்பர் 2026, 2:23 am IST

தில்லி முழுவதும் சுமாா் 2.30 லட்சம் வீடுகளுக்கு 3 கிலோவாட் மின்திறன் கொண்ட இலவச மேற்கூரை சூரியசக்தித் தகடுகளை விநியோகிக்க தில்லி அரசு இலக்கு நிா்ணயித்துள்ளதாக முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

திருத்தப்பட்ட தில்லி சூரியசக்தி கொள்கைக்கு முதல்வா் ரேகா குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்ததாவது: மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், சூரிய மின்சக்தித் தகடுகளைப் பொருத்துவற்கான செலவினங்களுக்கும் நிதியுதவி அளிப்பதே எங்கள் நோக்கம். மாதந்தோறும் 400 யூனிட் அல்லது அதற்கு மேற்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தும் அனைத்து வீடுகளுக்கும் அரசு இலவசமாக மேற்கூரை சூரிய மின்சக்தித் தகடுகளை வழங்கும். அதிக செலவு காரணமாக முன்பு இவற்றை நிறுவ முடியாத மக்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும். மாா்ச் 2027-க்குள் தில்லி முழுவதும் 2.30 லட்சம் வீடுகளில் சூரிய மின்சக்தித் தகடுகளை நிறுவ அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. எங்கள் அரசின் பசுமை தில்லி முன்னெடுப்பிற்கு இது ஒரு முக்கியமான அறிவிப்பாகும்.

தற்போது, தில்லியில் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வசதி கொண்ட சுமாா் 10,000 கட்டடங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அரசு கட்டிடங்கள் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.