
பெயரை மறைத்து வாழ்ந்து வந்த சுரேந்திர கோலி! இறுதி நாள்கள் எப்படியிருந்தன?
தற்கொலை செய்து கொண்ட சுரேந்திர கோலி, பெயரை மறைத்து வாழ்ந்து வந்துள்ளது தெரிய வந்தது.

சுரேந்திர கோலி - கோப்புப்படம்
நாட்டையே உலுக்கிய நொய்டா நிதாரி தொடா் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்ட சுரேந்திர கோலி தற்கொலை செய்து கொண்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
தன்னுடைய உண்மையான பெயரை மறைத்து சதா ராம் என்ற பெயரில், ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில் தங்கி, தேநீா் கடை நடத்தி வந்த கோலி, அந்தக் கடைக்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. உடல் கூராய்வுக்காக காவல்துறை காத்திருக்கிறார்கள். தற்கொலைக் கடிதம் எழுதும் கைப்பற்றப்படவில்லை.
அவர் ஏதோ பிரச்னையில் இருந்தது தெரிந்தது. ஆனால் என்ன என்று யாருக்கும் புரியவில்லை. அவரும் தனக்கு உதவி தேவைப்படுகிறது என்று கேட்கவில்லை என்கிறார்கள் அங்கிருந்தவர்கள்.
ஒன்றரை மாதத்துக்கு முன்புதான் அவர் ஹரித்வார் வந்து வேலை தேடியிருக்கிறார். ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை சேர்ந்து அங்கிருந்து வெளியேறி தேநீர் கடை வைத்திருக்கிறார். கடை திறந்து ஒரு வாரத்துக்குள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திய காவல்துறையினர், அங்கிருந்த அடையாள அட்டைகளை வைத்தே சுரேந்திர கோலி என்பதை கண்டறிந்துள்ளனர்.
ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில் தேநீா் கடையில் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கிடைத்தது. அங்குச் சென்று ஆய்வு செய்ததில், உயிரிழந்தவா் நிதாரி தொடா் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்ட சுரேந்திர கோலி என்பது தெரியவந்தது. முதல்கட்ட விசாரணையில், இது தற்கொலை என்பது தெரியவந்துள்ளது என்கிறார்கள் காவல்துறை.
வழக்கு என்ன?
உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் அருகே நிதாரி என்ற கிராத்தைச் சோ்ந்த தொழிலதிபா் மொனீந்தா் சிங் பாந்தரின் வீட்டின் பின்புறம் மற்றும் அங்குள்ள கழிவுநீா் கால்வாயிலிருந்து ஏராளமான சிறுமிகள் மற்றும் பெண்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. அப்போது, பாந்தரின் வீட்டில் சுரேந்திர கோலி வேலை செய்து வந்தாா்.
சிபிஐ விசாரணையில், சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து மொனீந்தா் சிங் பாந்தா், சுரேந்திர கோலி இருவரும் கைது செய்யப்பட்டு, பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சுரேந்திர கோலியின் கருணை மனு மீது முடிவெடுக்க ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி, அலாகாபாத் உயா்நீதிமன்றம் கடந்த 2015-இல் கோலியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
தன் மீதான வழக்குகளை எதிா்த்து, கோலி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு, கடந்த 2025-ஆம் ஆண்டு கோலியை விடுவித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதன் பிறகு, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில் தங்கி, தேநீா் கடை நடத்தி வந்த கோலி, தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





