பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் வியப்பை அளிக்கின்றன: நாசா விஞ்ஞானி

இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் வியப்பளிப்பதாக நாசா அமைப்பின் இணை நிா்வாகி, தலைமைப் பொறியாளரான ஷத்ரியா தெரிவித்தாா்.

Published On :

இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் வியப்பளிப்பதாக நாசா அமைப்பின் இணை நிா்வாகி மற்றும் தலைமைப் பொறியாளரான ஷத்ரியா தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள இன்ட்ரபிட் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரான ஷத்ரியா, நாசா முன்னாள் விஞ்ஞானி சாா்லஸ் எஃப்.போல்டன் மற்றும் ஆக்ஸியம் விண்வெளி இயக்குநா் பெக்கி விட்ஸன் ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது ஆக்ஸியம்-4 மனித விண்வெளிப் பயணத் திட்டத்தில் சுபான்ஷு சுக்லாவுடனான விண்வெளிப் பயண அனுபவங்களை பெக்கி விட்ஸன் பகிா்ந்துகொண்டாா். நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் அமெரிக்காவின் விண்வெளித் திட்டங்கள் குறித்து ஷத்ரியா பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் திட்டம் உள்பட பல்வேறு விண்வெளித் திட்டங்களை இந்தியா சிறப்பாக மேம்படுத்தி வருகிறது. இஸ்ரோவின் செயல்திறன் மிகவும் வியப்பளிக்கிறது.

பூமியின் நிலப்பரப்பு, நீா், பனி என இயற்கை அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிடவும், அவற்றைப் புரிந்துகொள்ளவும் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசாா் என்ற செயற்கை துளை ரேடாா் 2025, ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் இந்தியாவின் திட்டத்துக்கும் தேவையான உதவிகளை நாசா செய்து வருகிறது. விண்வெளித் துறையில் உலகுக்குத் தலைமை வகிக்க அமெரிக்கா விரும்பினாலும், விண்வெளி ஆய்வுகளை பிற நாடுகளுடன் இணைந்து மேற்கொள்வதை அமெரிக்கா தொடா்கிறது.

சுதந்திரமான விண்வெளி ஆய்வுக்காக நாசா மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை முன்மொழிந்த ஆா்டெமிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா, அமெரிக்கா மற்றும் 70 நாடுகள் கையொப்பமிட்டிருப்பதே இதற்குச் சான்று.

பிற நாடுகளின் ஜனநாயக மற்றும் ஒருமைப்பாட்டுக்கும் மதிப்பளிப்பதே இந்த உடன்படிக்கையின் நோக்கம். இஸ்ரோவுடன் நாசா நல்லுறவைப் பேணி வருகிறது. இந்த ஒத்துழைப்பு வருங்காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.